பாலஸ்தீன போராளிகளுக்கு இன்குலாப்.. கோவையை அதிரவைத்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் முழக்கம்!
கோவை: இஸ்ரேல்- ஹமாஸ் இயக்க யுத்தத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கோவையில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் ஜிஹாதிகள் அக்டோபர் 7-ந் தேதி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து இஸ்ரே-ஹமாஸ் இடையேயான யுத்தம் உக்கிரமாக நடைபெற்று வருகிறது.

இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தம்: கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தத்தில் இருதரப்பிலும் சுமார் 8,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் மட்டும் குழந்தைகள் ,பெண்கள் உட்பட 5,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். பாலஸ்தீன மக்கள் அகதிகளாக தஞ்சமடைந்த மருத்துவமனை உள்ளிட்டவையும் இஸ்ரேலால் தாக்கப்பட்டன. இந்த யுத்தத்தில் சிக்கிய அப்பாவி பாலஸ்தீன மக்களுக்கு சர்வதேசம் உதவிக் கரம் நீட்டி வருகிறது. ஹமாஸ் ஜிஹாதிகளுடம் தங்கள் வசம் உள்ள பிணைக் கைதிகளை அடுத்தடுத்து விடுவித்தும் வருகின்றனர்.

அமைதி முயற்சிகள்: அதேநேரத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவும் சர்வதேச அளவில் அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன. உலகின் பல நாடுகளில் இஸ்ரேல், பாலஸ்தீன ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தியாவிலும் இதேபோல போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
கோவையை அதிர வைத்த முழக்கம்: கோவையில் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் இன்று பாலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்டம் நடத்தப்பட்டது. கோவை உக்கடம் பகுதியில் இன்று இப்போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
இதில் பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள், அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் இன்று ஒன்று திரண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில், இன்குலாப்! இன்குலாப்- பாலஸ்தீனம் இன்குலாப்; இன்குலாப் இன்குலாப் பாலஸ்தீன போராளிகளுக்கு இன்குலாப் என்பது உள்ளிட்ட முழக்கங்கள் ஒருசேர எதிரொலித்தன. இந்தப் போராட்டத்தில் பேசிய முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகள், இஸ்ரேலால் காஸா பகுதியில் எங்கள் இனம் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படுகிறது என வேதனை தெரிவித்தனர். ஏற்கனவே கோவையில் மக்கள் ஒற்றுமை மேடை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications