கோவையில் கணவனை பிரிந்த பிரபல பெண் தொழிலதிபர்.. அந்த புகைப்படங்கள்.. ஐடி ஊழியர் கைது
கோவை: கோவையை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் கோவவையின் மையப்பகுதியில் சொந்தமாக ஐ.டி. நிறுவனம் நடத்தி வந்தார். அங்கு ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த அருண்குமார் என்பவர் 2022-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இதனால் அவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. கணவனைபிரிந்து வாழ்ந்த பெண்ணான அவரிடம் திருமண ஆசை வார்த்தை கூறி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் ஐடி ஊழியர். இறுதியாக புகைப்படங்களைகாட்டி அவரிடம் பணம் பறிக்க முயன்தாக கூறப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்தனர்.
கணவனை பிரிந்த பெண்களை குறிவைத்து ஆண்கள் வலை வீசுவது பல்வேறு இடங்களில் நடக்கிறது. அவர்களிடம் பாசமாக பேசுவது, ஆறுதல் கூறுவது போன்று வலைகளை வீசுவது அதிகமாக நடக்கிறது. அதில் சிக்கும் பெண்களை தேவைக்கு பயன்படுத்துவது, அவர்களை வீடியோ எடுத்து பணம் பறிக்க முயல்வது அதிகமாக நடக்கிறது. அப்படித்தான் கோவையில் பெண் தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயன்ற ஐடி ஊழியர் கைதாகி உள்ளார். என்ன நடந்தது என்று பார்ப்போம்.

கோவையை சேர்ந்த 40 வயது பெண் சொந்தமாக ஐ.டி. நிறுவனம் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். அங்கு ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த அருண்குமார் என்பவர் அவரது நிறுவனத்தில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். ஒரே நிறுவனத்தில் வேலை செய்த அவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அந்த பெண் தொழில் அதிபர், கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அருண்குமார் அந்த பெண் தொழிலதிபரிடம் நெருங்கி பழக தொடங்கியிருக்கிறார்கள். பின்னர் அவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பெண் தொழில் அதிபரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
மேலும் அவர், அந்த பெண்ணுடன் தனிமையில் இருக்கும் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி பணம் பறித்து வந்து உள்ளார். மேலும் தனிமையில் இருந்த புகைப்படங்களை காட்டி மிரட்டி தொல்லை அளித்ததாக தெரிகிறது. இது குறித்து 2023-ம் ஆண்டு அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து அவர், அந்த பெண் தொழில் அதிபரின் இ-மெயில் முகவரிக்கு தனிமையில் இருக்கும் புகைப்படங்களை அனுப்பி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கோவை சாய்பாபா காலனி போலீசார் அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications