விரட்டும் ரெய்டு.. நள்ளிரவில் மணி அடித்த அதிகாரிகள்.. வேலுமணியின் உதவியாளரின் தம்பி வீட்டில் வேட்டை!
கோவை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் சகோதரர் வசந்தகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் நள்ளிரவு முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
வசந்தகுமார், வடவள்ளி சந்திரசேகர் வெளியீட்டாளராகச் செயல்படும் 'நமது அம்மா' நாளிதழ் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கோவை குனியமுத்தூர் மைல்கல் பகுதில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் சகோதரர் வசந்தகுமார் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

சிக்கிய சந்திரசேகர்
கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுணிக்கு நெருக்கமானவர். நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த 6-ஆம் தேதி சந்திரசேகர் வீடு மற்றும் அவரது சகோதரர், சகோதரிகள் வீடு உள்பட 6 இடங்களில் சோதனை நடந்தது. இந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் லேப்டாப்பை வருமான வரித்துறையினர் கைப்பற்றிச் சென்றதாக கூறப்பட்டது.

சந்திரபிரகாஷ்
சந்திரசேகரின் நண்பரான சந்திரபிரகாஷ் கோவை பீளமேட்டில் கே.சி.பி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இங்கும் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. 5-வது நாளாக கே.சி.பி.நிறுவனம், ஆலயம் அறக்கட்டளையிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. சந்திரபிரகாஷ் விட்டிலும் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.

கேசிபி நிறுவனம்
அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் துறையில் அதிகமான பணிகளை டெண்டர் எடுத்து வேலை செய்ததில் கே.சி.பி நிறுவனம் முக்கிய பங்கு வகித்தது. சந்திரசேகர் இந்த நிறுவனத்தில் இயக்குநராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. சந்திரசேகர் சில ஆண்டுகளுக்கு முன்பு கே.சி.பி நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இருவரும் நெருக்கமானவர்களாகவே இருந்து வருகின்றனர்.

உதவியாளரின் தம்பி வீட்டில்
இந்நிலையில் நள்ளிரவு முதல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்தகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை குனியமுத்தூர் மைல்கல் பகுதில் உள்ள வசந்தகுமார் வீட்டில் இந்த சோதனை அதிரடியாக நடைபெற்று வருகிறது.

வசந்தகுமார்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்தகுமார், வேலுமணிக்கு மிகவும் நெருக்கமான வடவள்ளி சந்திரசேகர் வெளியீட்டாளராகச் செயல்படும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா' நாளிதழ் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

ஐந்தாவது நாளாக
எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர்களைச் சுற்றி வருமான வரித்துறையினர் ஐந்தாவது நாளாக தொடர்ந்து ரெய்டில் ஈடுபட்டு வருவது எஸ்.பி.வேலுமணிக்கு குடைச்சலாக மாறியுள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக திட்டமிட்டு வரும் நிலையில், அவருக்கு நெருக்கமான பலர் குறிவைக்கப்பட்டு வருவது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications