மதநல்லிணக்கத்தை வலியுறுத்த.. கோவை உக்கடத்தில் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சென்ற ஜமாத் நிர்வாகிகள்
கோவை: கோவை உக்கடம் அருகே கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பகுதியை பார்வையிட்ட ஜமாத் நிர்வாகிகள் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்குள் சென்றனர். அவர்களை கோயில் நிர்வாகிகளும் பூசாரியும் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரை ஓட்டிச் சென்ற ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில் உக்கடம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் அன்றைய தினமே இறந்தவர் யார் என்பது குறித்த விவரங்களையும் கண்டறிந்தனர். மேலும் முபினின் வீட்டில் சோதனையிட்டனர்.

100 கிலோ வெடிப்பொருட்கள்
அந்த சோதனையின் போது 100 கிலோ வெடிப்பொருட்கள் இருந்ததாகவும் அதை கைப்பற்றியதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முபினின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். முபினின் வீட்டருகே இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீஸார், அவரது வீட்டிலிருந்து யாரோ சிலர் அதிக எடை கொண்ட பொருளை தூக்கிச் சென்று காரில் வைத்த காட்சிகள் பதிவாகியிருந்தன.

வெடிபொருளாக இருக்கலாம்
எனவே அவை வெடி பொருளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் உக்கடம் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது முபின் வந்த வாகனத்தை நிறுத்தியதால் அவர் சிலிண்டரை வெடிக்க வைத்திருக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளனர்.

கோவை கார் வெடிப்பு
இந்த நிலையில் கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சென்றிருந்தனர். கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சென்ற அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவையில் மத நல்லிணக்கத்துடன் மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள், எந்த பதற்றமும் இல்லை என்றார்.

ஜமாத் அமைப்பினர்
இந்த நிலையில் இன்றைய தினம் கோவை உக்கடம் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு ஜமாத் அமைப்பினர் பார்வையிட்டனர். மேலும் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கும் ஜமாத் நிர்வாகிகள் சென்றனர். அவர்களை கோயில் நிர்வாகிகளும் பூசாரியும் வரவேற்று அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலான பேச்சுவார்த்தையை நிகழ்த்தினர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications