கையை எடுடா.. கோபத்தில் கத்திய கே.சி பழனிசாமி.. அதட்டி உள்ளே அனுப்பிய போலீஸ்.. என்ன நடந்தது?
தன்னை கைது செய்ய வந்த போலீசாருடன், முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி சண்டை போட்ட சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.
Recommended Video
கோயம்புத்தூர்: தன்னை கைது செய்ய வந்த போலீசாருடன், முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி சண்டை போட்ட சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.
அதிமுக முன்னாள் எம்பி கேசி.பழனிசாமி அதிமுகவிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனால் நான் தொடர்ந்து அதிமுகவில்தான் இருக்கிறேன் என்று பழனிசாமி கூறி வந்தார்.
அதிமுகவிலிருந்து அவர் விலக்கப்பட்ட போதும், தொடர்ந்து அதிமுக தொடர்பாக பேசி வந்தது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. அதோடு இவர் அதிமுக தொடர்பாக இணையதளம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். போலியாக அனுமதி இன்றி இணையதளம் நடத்தி வந்துள்ளார்.

கைது
இதையடுத்து இன்று காலை கே.சி பழனிசாமி கைது செய்யப்பட்டார்.கோவை ஆர்.எஸ்.புரம், லாலி சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் இவர் மீது 11 பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். இவர் கைது செய்யப்பட்டது, அவரின் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

போலீஸ் எப்படி
இந்த நிலையில் இவரை போலீசார் கைது செய்து வெளியே அழைத்து வந்த போது பரபரப்பு சம்பவம் நடைபெற்றது. வீட்டை விட்டு வெளியே வந்த கே.சி பழனிசாமி, அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்க முயற்சி செய்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னை கட்சியில் இருந்து நீக்கவில்லை. நான் இன்னும் கட்சியில்தான் இருக்கிறேன். கட்சியில் இருப்பவர்கள்தான் பொய் சொல்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

அனுமதிக்கவில்லை
ஆனால் போலீசார் அவரை பேச அனுமதிக்கவில்லை. அவர் செய்தியாளர்களிடம் பேசுவது அனுமதிக்காமல், போலீசார் அவரை தள்ளிக்கொண்டே இருந்தனர். இதனால் கே சி பழனிசாமி அங்கிருந்த போலீசார் மீது கோபம் அடைந்தார். இதனால் போலீசார், கே. சி பழனிசாமியை இறுக்கிப்பிடித்து உள்ளே தள்ளினார்கள். கையை அழுத்தி பிடித்து, உள்ளே போங்க என்று அனுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

செம கோபம்
இதையடுத்து, போலீசாரிடம் கையை எடுடா என்று கே.சி பழனிசாமி கோபமாக கூறினார். ஆனால் போலீசார் இதை கேட்கவில்லை. கோபம் அடைந்த போலீசார், அவரை பேருந்துக்கு உள்ளே தள்ளினார்கள். அதன்பின், ஒரு போலீசார் கோபமாக வண்டியை எடுடா என்று கூறிவிட்டு, வண்டியை வேகமாக எடுத்து சென்றனர். முன்னாள் எம்பி ஒருவர் இப்படி நடத்தப்பட்டது அங்கே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications