பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரை சந்தித்து ஆதரவு கேட்ட கமல் - விபூதி கொடுக்கலையே
மத நல்லிணக்கத்துக்காக கமல்ஹாசனின் குரல் ஓங்கி ஒலிக்கிறது என்று பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறியுள்ளார்.
கோவை: பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரை சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளருமான கமல்ஹாசன் ஆதரவு கோரியுள்ளார். கமலுக்கு வாழ்த்து கூறிய சாந்தலிங்க மருதாசல அடிகளார், மத நல்லிணக்கத்துக்காக கமல்ஹாசனின் குரல் ஓங்கி ஒலிக்கிறது என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Recommended Video
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசன் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். நடந்து சென்று வீதி வீதியாக வாக்கு சேகரிக்கிறார். அனைத்து மத தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.
இஸ்லாமிய ஜமாத் தலைவர்கள், கிறிஸ்தவ பிஷப் மற்றும் பல்வேறு சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டிய கமல்ஹாசன், நேற்று பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரை சந்தித்தார்.

பேரூர் ஆதினத்துடன் கமல் சந்திப்பு
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட முடிவெடுத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்த மருதாசல அடிகளார், கமல்ஹாசனின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்துவருவதாக கூறினார்.

மத நல்லிணக்கம்
மத நல்லிணக்கத்துக்காக கமல்ஹாசனின் குரல் ஓங்கி ஒலிக்கிறது என்றும் பாராட்டிய பேரூர் ஆதினம், மக்களுக்கு ஊடகங்கள் மூலமாக அதிக செய்திகளை சொல்கிறீர்கள், சொல்லும் விஷயங்களை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பெண்கள் முன்னேற்றம்
சமூகத்தின் அடிமட்டத் தில் உள்ள மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும், அப்படியான ஒரு நிலையை தொடர்ந்தால், மறுமலர்ச்சியை எதிர்பார்க்க முடியும். பேரூர் தமிழ்க் கல்லூரி மூலமாகவும், நிர்வாகம் மூலமாகவும் கிராம சபை, தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றம் போன்றவைகளுக்காக குரல் கொடுத்து வருகிறோம் என்றும் ஆதினம் தெரிவித்தார்.

விபூதி கொடுக்கவில்லை
நிச்சயமாக சொல்லும் விஷயங்களை செயல்படுத்துவேன் என்று ஆதினத்திடம் கமல்ஹாசன் கூறினார். வழக்கமாக தன்னை சந்திக்க வருபவர்களுக்கு விபூதி கொடுப்பார் ஆதினம். நேற்று கமலுக்கு அவர் விபூதி பூச கொடுக்கவில்லை. கமல் விபூதி பூசிக்கொள்ள மாட்டார் என்பதால் அவர் கொடுக்காமல் விட்டிருக்கலாம் என்று ஆதின வட்டார தகவல்கள் தெரிவித்தன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications