கோவையே அசந்துடுச்சு.. கனிமொழி கேட்ட கேள்வி இருக்கே.. "அவள் என்ன டிரஸ் போட்டிருந்தால் உங்களுக்கென்ன"?
கோயம்புத்தூர்: திமுக எம்பியும், அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி, தமிழக காவல்துறைக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.. என்ன அது?
"பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் மற்றும் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள்" என்ற தலைப்பிலான கருத்தரங்கம் கோவையில் பெண்கள் கல்லூரியில் நடந்தது.. மாநில மகளிர் ஆணையம் சார்பில், இந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.. மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி முன்னிலை வகித்தார்.. மாவட்ட சமூக பாதுகாப்பு அதிகாரி அம்பிகா வரவேற்றார்.
கருத்தரங்கம்: இந்த கருத்தரங்கத்திற்கு சிறப்பு விருந்தினராக கனிமொழி கலந்து கொண்டார். அப்போது அவர் ஆற்றிய உரை மிகுந்த கவனத்தை ஏற்படுத்தி வருகிறது.. அத்துடன் கனிமொழி காவல்துறைக்கு விடுத்திருந்த கோரிக்கையானது, பலரையும் ஈர்த்து வருகிறது.
"காலம் காலமாக பெண்கள், குழந்தைகளுக்கு என்னென்ன அச்சுறுத்தல் இருக்கிறதோ அவை அனைத்தையும் தொழில்நுட்ப வளர்ச்சிக்குள் கொண்டு வந்துள்ளோம். இதனால் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் அபாயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்... ஆணும், பெண்ணும் சமம்... சாதி கிடையாது என்றெல்லாம் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக்கொடுப்பது கிடையாது...

முழு பாதுகாப்பு: பெண்களை மதிக்க வேண்டும் என்றும் சொல்வது கிடையாது.. பெண்களை வேறுமாதிரியாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும்.
நான் போகிற பல கல்லூரிகளில் இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறேன். ஏன் பெண்களுக்கு மட்டும் Dress Code வெச்சிருக்கீங்கன்னு கேட்பேன். இதனால் நிறைய கல்லூரி முதல்வர்கள், என்கிட்ட சண்டைக்கு வருவாங்க... ஆனா எனக்கு உண்மையிலேயே புரியல.. ஒரு பெண்ணுக்கு என்ன நடந்தாலும் அதற்கு அவள் தான் பொறுப்பு என்பதை நீங்கள் ஏன் திணிக்கிறீர்கள்? ஒரு பெண்ணுக்கு தான் என்ன உடை உடுத்த வேண்டும்.. என்னவாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது.
எடை போடுகிறார்கள்: அதை பார்க்கிறவர்கள் தான் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அவள் என்ன உடை உடுத்திருந்தாலும் அவளுக்கு மரியாதை தரவேண்டும். ஒரு பெண்ணை எடைபோடும் உரிமை இங்கு யாருக்குமே கிடையாது.
நம்முடைய நாட்டில் கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு. ஆனால் விமர்சனம் செய்பவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது கண்டிக்கத்தக்கது. கருத்துக்கு எதிர்வினை என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. நம்முடைய வாழ்க்கையில் சில தவறுகள் நடக்கும். அதற்கு எதிர்வினைகளும் இருக்கும். ஆனால் பெண்கள் கடந்த கால நிகழ்வுகளை நினைத்து வெட்கப்பட கூடாது. கோவை மாநகர காவல்துறை மாணவிகளுக்கு "போலீஸ் அக்கா" என்ற திட்டத்தை கொண்டு வந்து இருப்பது பாராட்டுக்குரியது.
நம்பிக்கைக்குரியவர்: வாழ்க்கையே ஒரு அனுபவம்தான். அதில் தவறுகள் இருக்கத்தான் செய்யும். நாம் சரியென்று நினைத்து செய்யும் விஷயங்கள் நாளை தவறாக மாறலாம். இன்று நம்பிக்கைக்குரியவர் என்று நினைத்து நாம் பழகும் நபர்கள், நாளை வேறு மாதிரியாக மாறிவிடலாம். இந்த மாதிரி விஷயங்கள் நடைபெறும் போது, இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் செய்யும் எந்த விஷயத்துக்காகவும் வெட்கப்பட வேண்டியதில்லை.
முக்கியமாக உங்கள் உடல். உங்கள் உடல் என்பது நீங்கள் வெட்கப்பட வேண்டிய விஷயம் கிடையாது... இது உலக இயற்கை. அதனால், யாராவது உங்கள் உடலை வைத்து மிரட்டினால், தயவுசெய்து ஓடி ஒளியாதீங்க.. ஏதோ வாழ்க்கையே முடிந்துவிட்டது போல தவறான முடிவையும் எடுக்காதீர்கள். தைரியமாக எதிர்கொள்ளுங்கள். காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்.
வேண்டுகோள்: இந்த நேரத்தில் போலீஸாருக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவுசெய்து உங்களிடம் புகார் அளிக்க வரும் பெண்கள் மீது பழிபோடாதீர்கள். நீ ஏன் அப்படி செய்தாய், நீ ஏன் அங்கே போனாய் என தயவுசெய்து கேட்காதீர்கள். அவர்கள் அளிக்கும் புகார் மீது உடனே நடவடிக்கை எடுங்கள்.
வேண்டுகோள்: பாதிக்கப்பட்டு புகார் கொடுக்க வரும் பெண்கள் புண்படும்படி கேள்விகளை போலீசார் கேட்கும்போது அவர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். இதை போலீசார் உணர வேண்டும். போலீசாருக்கு தெரிய வேண்டும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதில் இருந்து விடுபட்டு வெளியே வர தேவையான வழிமுறைகளை பெற்றோர் செய்ய வேண்டும். சைபர் கிரைமில் பணியாற்றும் போலீசாருக்கு, பாதிக்கப்பட்டவர்களை கையாளுவதில் போதிய விழிப்புணர்வு இருக்க வேண்டும்" என்று கனிமொழி உரையாற்றினார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications