கோவை கல்பனா.. பஸ்ஸிலேயே வந்து ஸ்டாலினை சந்தித்தாரே.. கோயம்புத்தூர் முதல் பெண் மேயர்.. இப்ப என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அரசியலில் பெரும் பரபரப்பு இன்றைய தினம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம்?
2 வருடங்களுக்கு முன்பு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கோவையை திரும்பி பார்க்க வைத்தவர் கல்பனா.. கோவையில் அடுத்த மேயராக திமுகவில் இங்கு யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது..

திமுக வெற்றி: காரணம், இதுவரை பிற கட்சிகளை சேர்ந்தவர்கள்தான் கொங்குவில் மேயராக இருந்திருக்கின்றனதே தவிர திமுகவில் யாரும் மேயரானது இல்லை.. கோவை மாநகராட்சி மேயர் பதவியில் அமர்வதற்கான வாய்ப்பு இரண்டு முறை கிடைத்தும் அதனைக் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுத்திருந்தது அப்போதைய திமுக தலைமை..

Kovai Mayor Kalpana Coimbatore

ஆனால், இந்தமுறை அதுபோல் செய்துவிடக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தது. பெரிய அளவுக்கு சர்ச்சையில் சிக்காத ஒருவரை செந்தில் பாலாஜி தேடினார்... அதேசமயம் தனக்கு நிகராக யாரும் வந்துவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார்.. அந்தவகையில், எளிமையானவராக கிடைத்தவர்தான் 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா.

வாடகை வீடு: பாரம்பர்ய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்.. இவரது கணவர் மணியகாரம்பாளையம் பொறுப்புக்குழு உறுப்பினராக இருப்பவர்.. ரூ.73 லட்சம் சொத்து இருப்பதாக தன்னுடைய வேட்புமனுவில் கூறியிருந்த கல்பனா, வாடகை வீட்டில்தான் வசிக்கிறார். இந்த கவுன்சிலர் சீட் வாங்குவதற்கே படாதபாடு பட்டிருக்கிறார் கல்பனா.

போதுமான வசதியின்மை காரணமாக, கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், கழகத் தலைவரை சந்திப்பதற்காக சென்னைக்கு பஸ்ஸிலேயே வந்து சென்றிருக்கிறார்.. இந்த தகவல்கள் எல்லாம் அப்போது சோஷியல் மீடியாவில் வைரலானது..

முதல் பெண் மேயர்: இறுதியில், கோவை மேயர் வேட்பாளராக கல்பனா அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் கோவையின் முதல் பெண் மேயராகவும், திமுகவின் முதல் கோவை மேயராகவும் வரலாறு படைத்தார் கல்பனா..

ஆனால், மேயராக பதவியேற்றதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் கல்பனா.. அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ஷர்மிளா சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு, "மேயரின் வீட்டை அழகுபடுத்த ஒரு கோடி ரூபாய் நிதியா? ஊழல் நடக்குதுங்கோ, ஊழல் நடக்குதுங்கோ" போன்ற பதாகைகளை கையில் ஏந்தி தரையில் உட்கார்ந்து கோஷங்களை எழுப்பியபோதே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆடியோ : இதற்கு பிறகு மேயரின் அம்மா வசித்த வீட்டினருகே வசிக்கும் பெண்ணுடன் தகராறு ஏற்பட்டு, அந்த பெண் கமிஷனர் ஆபீஸ் வரை சென்று மேயர் மீதே புகார் தந்திருந்தார். அதுமட்டுமல்ல, சந்தையில் பணம் வசூல் செய்வது தொடர்பான பிரச்சனையில் மேயரின் கணவர் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

திமுக கவுன்சிலர்களே மிகப்பெரிய அதிருப்திக்குள்ளாகி, மேயர் மீதான எதிர்ப்பையும் பதிவு செய்து வந்ததாக தெரிகிறது. இதற்கு நடுவில், லோக்சபா தேர்தலிலும் மேயருக்கு பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. அதாவது, மேயர் கல்பனா வார்டில் திமுக வேட்பாளருக்கு ஓட்டுகள் குறைவாகவே கிடைத்திருக்கிறது.. இதே வார்டில் அண்ணாமலை 330 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தாராம்..

வாக்குகள் குறைவு: தமிழ்நாட்டின் முக்கியமான தொகுதியில், அதுவும் மேயரின் வார்டில் வாக்குகள் குறைந்தது, திமுக மேலிடத்தையே கவனிக்க செய்தது.. இது தொடர்பான விசாரணையும் நடந்ததாக தெரிகிறது.

இந்த பின்னணியில்தான் மேயர் ராஜினாமா செய்ய போவதாக தகவல்கள் பரபரக்கின்றன.. ராஜினாமா கடிதத்தை மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. இதற்காகவே சென்னையில் முகாமிட்டுள்ளாராம் கல்பனா..

என்ன காரணம்: அதுமட்டுமல்ல, மாநகராட்சியில் இன்று நடைபெற இருந்த குறைதீர்க்கும் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கமாகும்..

அந்தவகையில் இன்றும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததாம். இப்போது திடீரென குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

உண்மையா: உண்மையிலேயே மேயர் பதவியை கல்பனா ராஜினாமா செய்கிறாரா? அல்லது இதெல்லாம் தவறான தகவல்களா? என்று தெரியவில்லை.. எனினும், இன்று நடக்கவிருந்த கூட்டம் திடீரென ரத்தாகியிருப்பது பல்வேறு சந்தேகங்களை கோவை அரசியலில் ஏற்படுத்தியிருக்கிறது..

ஒருவேளை மேயர் பதவி கல்பனாவிடமிருந்து பறிக்கப்படும் பட்சத்தில், அந்த பதவியை கைப்பற்ற இப்போதே சில திமுக பெண் கவுன்சிலர்கள் மும்முரமாகிவிட்டார்களாம்.. சிலர் சென்னைக்கே நேரடியாகவே கிளம்பி சென்று கொண்டிருக்கிறார்களாம்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+