4 ஆக பிரிந்த அதிமுக கம்பெனி 6 மாசத்தில் மூடப்படும்.. கோவை செல்வராஜ் ஆரூடம்
கோவை: அதிமுக எனும் கம்பெனி 6 மாதத்தில் மூடப்படும் என கோவை செல்வராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசுகையில் அதிமுக கம்பெனி 6 மாதத்தில் மூடப்படும். அதிமுக எனும் கம்பெனி 4 ஆக பிரிந்துள்ளது. யார் கூறியும் நான் திமுகவில் இணையவில்லை.
நானாகவே திமுகவில் இணைந்தேன் என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். கோவை செல்வராஜ் அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓபிஎஸ் பக்கம் இருந்தார். அவருக்கு கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், சி வி சண்முகம் உள்ளிட்டோருக்கு தக்க பதிலடிகளை கொடுத்து பேசி வந்தார் கோவை செல்வராஜ். இந்த நிலையில் திடீரென அதிமுகவிலிருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவித்தார். இதுகுறித்து அவர் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது: நான் கடந்த சில மாதங்களாகவே கட்சி பணிகளில் ஈடுபடாமல் விலகியே இருந்தேன்.

ஓபிஎஸ் பதவி
அப்போது ஓபிஎஸ் என்னிடம் வந்து நீங்கள் வகிக்கும் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை வேறு யாருக்காவது கொடுத்துவிடவா என கேட்டார். அதற்கு நான் தாராளமாக கொடுத்து விடுங்கள். இனி உங்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்றேன். ஓபிஎஸ்ஸும் வைத்திலிங்கமும் அதிமுகவை அழித்து வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே கட்சியில் பதவி கொடுத்து வருகிறார்கள். இதனால் நிறைய பேருக்கு அவர்கள் மீது அதிருப்தி உள்ளது. விரைவில் நிறைய பேர் அதிமுகவிலிருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணைவார்கள்.

ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும்
ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சுயநலத்திற்காக அதிமுகவை பிளவுப்படுத்துகிறார்கள். அவர்களுடன் பயணிக்க நான் விரும்பவில்லை. எனவே கட்சியிலிருந்து நானாகவே விலகுகிறேன். என்னை யாரும் நீக்கவில்லை என தெரிவித்திருந்தார். இதையடுத்து கோவை செல்வராஜை சமாதானப்படுத்த பெங்களூர் புகழேந்தி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜியுடன் வந்த கோவை செல்வராஜ்
ஆனால் கடந்த 7ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் அண்ணா அறிவாலயத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் கோவை செல்வராஜ் சென்றிருந்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் தமிழக மக்களையும் தமிழகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை முதல்வர் ஸ்டாலினை தவிர வேறு யாருக்கும் இல்லை. ஆறுமுகசமி ஆணையத்தின் அறிக்கையால் நான் அதிமுகவில் தொடரவில்லை என்றும் கோவை செல்வராஜ் தெரிவித்திருந்தார்.
-
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications