கோவையில் வாடகை காரில் யார் பாருங்க.. ஒரு நகைக்கடையே இங்கிருக்கே.. கோயம்புத்தூரில் அம்பலப்பட்ட அமுதா

Subscribe to Oneindia Tamil

கோவை: குறிப்பிட்ட வாடகை காரில் மட்டுமே அமுதா என்ற பெண் பயணித்து வந்த நிலையில், அதுவே அவருக்கு வினையாகவும் முடிந்துவிட்டது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்துள்ளனர் என்றாலும், கோவையில் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை, சிங்காநல்லுார் நீலிகோணம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னப்பன்.. 50 வயதாகிறது.. இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அமுதா என்பவர், அடிக்கடி வாடகைக்கு அழைத்து இந்த காரை பயன்படுத்தி வந்திருக்கிறார்.. ரத்தினபுரி கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் அமுதா.

coimbatore kovai customs

எனவே, சின்னப்பனுக்கு ரெகுலர் கஸ்டமர் ஆனார் அமுதா.. கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ் கட் ரோடு போன்ற பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு இந்த காரில்தான் அமுதா செல்வாராம்.. குறிப்பாக, நகைக்கடைகளுக்கு செல்லும்போதெல்லாம் அமுதா, இந்த சின்னப்பனின் வாடகை காரில்தான் சென்று வந்துள்ளார். இதை பற்றி ஒருமுறை, அமுதாவிடமே சின்னப்பன் கேட்டுள்ளார்.

பறிமுதல்: அதற்கு அமுதா, ஏர்போர்ட்டில் பறிமுதல் செய்யப்படும் நகைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் தனக்கு கொடுப்பார்கள் என்றும், அந்த நகைகளை மார்க்கெட் விலையை விட, குறைந்த விலைக்கு விற்று வருவதாகவும் சொல்லி உள்ளார்..

இதை நம்பிய சின்னப்பன், தான் பாடுபட்டு சேமித்து வைத்திருந்த ரூ.12.41 லட்சத்தை அமுதாவிடம் தந்து நகைகளாக கேட்டுள்ளார்.. அமுதாவும் அந்த பணத்தை வாங்கி கொண்டார்.. ஆனால், பல மாதங்களாகியும், நகைகளை சின்னப்பனுக்கு தரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சின்னப்பன், நகைக்கடைகளுக்கு சென்று விசாரித்திருக்கிறார்.

நகைக்கடைகள்: நகைக்கடைகளுக்கு செல்லும் அமுதா, நகைப்பெட்டிகளை மட்டும் வாங்கிச்சென்றது தெரியவந்தது. உடனே சின்னப்பன், அமுதாவிடம் பணத்தை கேட்டதற்கு, சில நாட்களில் நகையாகவே, தந்து விடுவதாக சொல்லியிருக்கிறார். ஆனால் நகையையும் தரவில்லை, பணத்தையும் தரவில்லை.

இதற்குபிறகுதான் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்றுணர்ந்த சின்னப்பன், கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்... இந்த புகாரின்பேரில், ரத்தினபுரி போலீசாரும் விசாரணையை துவங்கினர். அப்போதுதான் அமுதாவின் ஏராளமான மோசடி வெளியே தெரிய ஆரம்பித்தது.. சின்னப்பனை போலவே, ஏராளமானோரை பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை: இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து அமுதாவையும், அவரது கூட்டாளி கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த இமாம் கசாலி என்பவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்திருக்கிறார்கள். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. அமுதாவிடம் ஏமாந்தவர்கள் யார் யார்? எத்தனை பேரை மோசடி செய்திருக்கிறார்? என்ற விவரமெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.

அதேசமயம், சுங்கத்துறையினர் மூலம் நகைகளை பெறப்பட்டதாக இந்த பெண் கூறியிருப்பதால், அதுகுறித்த உண்மைத்தன்மையையும் கண்டறிந்து வருகிறார்கள். இதற்கென தனியாக புரோக்கர்கள் யாராவது இருக்கிறார்களா? அல்லது அடகுக்கடைக்கு கொண்டு போன நகைகள் யாரிடமிருந்து பெறப்பட்டன என்ற விவரங்களையும் போலீசார் கையில் எடுத்துள்ளனராம்.

ஆனால், சுங்கத்துறையினர் மூலம் நகைகள் தனக்கு கிடைத்ததாக டிரைவரிடம் சொன்னதாக , இந்த பெண் கூறியிருப்பதால், அதுகுறித்த உண்மைத்தன்மையையும் கண்டறிந்து வருகிறார்கள். இதற்கென தனியாக புரோக்கர்கள் யாராவது இருக்கிறார்களா? அல்லது அடகுக்கடைக்கு கொண்டு போன நகைகள் யாரிடமிருந்து பெறப்பட்டன என்ற விவரங்களையும் போலீசார் கையில் எடுத்துள்ளனராம். எனவே இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+