நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதனை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்கள்.. அரசு வேடிக்கை பார்க்கிறது.. கிருஷ்ணசாமி
கோவை: மதுரை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக அரசியல் உள்நோக்கத்தோடு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏற்புடையதல்ல என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பில் பிறருக்கு மாற்றுக் கருத்து இருக்கும்பட்சத்தில் விமர்சிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. ஆனால் தற்போது அவரைச் சிலர் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், அரசு அதை வேடிக்கை பார்ப்பதும் கண்டனத்திற்குரியது என்றும் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றானது திருப்பரங்குன்றம். அதன் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றிட அனுமதி அளித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் உத்தரவிட்டார். வழக்கு தொடர்ந்த ராம ரவிக்குமார் உட்பட 10 பேர் தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்தத் தீர்ப்பு திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சாதகமான தீர்ப்பு என்றே கருத வேண்டும். எனவே, இதில் கோயிலுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கியவுடன், அரசுக்கு இதில் மாற்றுக் கருத்து இருந்தபட்சத்தில், உடனடியாக அன்றே இரு நீதிபதிகள் அடங்கிய அமர்விற்கு அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கலாம். அதை விடுத்து கோயில் நிர்வாக அதிகாரியை வைத்து முறையீடு செய்ததும், நீதிமன்ற விசாரணையின்போது அவர் பின்வாங்கியதும் புதிராக உள்ளது.
மேலும் மேல்முறையீடு செய்வதென்றால் அங்குள்ள தர்கா நிர்வாகம்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களும் எதிர்ப்பைத் தெரிவிக்காத நிலையில் நீதிமன்ற உத்தரவை ஏற்று தீபத்தூணில் தீபம் ஏற்றி இருந்தால் பிரச்சினை பெரிதாக எதுவும் எழுந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், 144 தடை உத்தரவு பிறப்பித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் வழக்கம் போல மோட்சத் தூணில் மட்டும் ஏற்றியது நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகும்.
தமிழ் கடவுள்களில் முதல் கடவுளாகக் கருதப்படும் பிரசித்தி பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், அரசியல் உள்நோக்கத்தோடு அணுகி, 144 தடை உத்தரவு விதித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றத் தடை செய்து பிரச்சனையைப் பெரிதாக்கியது ஏற்புடையதல்ல!
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்சனையில் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு மதிப்பளித்திருக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
மேலும், நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பில் பிறருக்கு மாற்றுக் கருத்து இருக்கும்பட்சத்தில் விமர்சிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. ஆனால் தற்போது அவரைச் சிலர் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், அரசு அதை வேடிக்கை பார்ப்பதும் கண்டனத்திற்குரியது" இவ்வாறு கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications