"யாராச்சும் ஸ்டாலினை எழுப்பி விடுங்க.. ரொம்ப நாளாக தூக்கத்தில் இருக்கிறார்".. குஷ்பு சுறுக்.. என்னவாம்

எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து குஷ்புவும் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டில் சமீப காலமாகவே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றன..

திமுக ஆட்சி அரியணை ஏறியதுமுதலே, சட்டம் ஒழுங்கு பிரச்சனையைதான் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கையிலெடுத்து வருகின்றன.. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரம் குறித்து நிறைய கேள்விகளை எழுப்பியவாறே இருக்கிறார்..

 நகைக்கடை

நகைக்கடை

அதற்கு ஏற்றார்போல் இந்த 4 நாட்களாகவே அதிர்ச்சி சம்பவங்கள் அதிகரித்து விட்டன.. சென்னை பெரம்பூரில் நகைகடையில் மர்மநபர்கள் தங்கம், வைரம் என மொத்தம் 9 கிலோ நகைககைளை கொள்ளையடித்து சென்றனர்.. அதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாளுக்கு முன்பு, ஒரே நாளில் 4 ஏடிஎம் மையங்களை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை கோர்ட் வாசலிலேயே, அதுவும் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டது மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது... பொதுமக்கள் இதை பார்த்துவிட்டு, அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்..

 வக்கீல்கள் ஆபீஸ்கள்

வக்கீல்கள் ஆபீஸ்கள்

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் பல்வேறு கடைகள் மற்றும் வக்கீல்களின் ஆபீஸ்கள் செயல்பட்டு வருகிறது. நேற்றைய தினம் இரு இளைஞர்கள் மீது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரி தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அப்போது மர்ம கும்பல் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். இன்னொருவரோ, ரத்த காயங்களோடு தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவத்தின்போது அதிர்ச்சி என்னவென்றால், கொலை செய்த கொலையாளிகள் சர்வசாதாரணமாக நடந்து செல்கிறார்கள்.. இந்த சிசிடிவி பார்த்து பொதுமக்கள் உறைந்து போயுள்ளனர்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இந்த கோவை சம்பவத்தை மையப்படுத்தி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.. "கோவையில் வீடுபுகுந்து துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை நிகழ்ந்துள்ளது. அதே கோவையில் நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கண்முன்னே மேலும் ஒருவர் கொலை, திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் தொடர் கொள்ளை, சென்னையில் நகைக்கடையில் கொள்ளை, போன்ற சம்பவங்களை பார்க்கும்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லையோ என்ற கேள்வி எழுவதுடன், நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியில்,பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகிறார்கள் தமிழ்நாட்டில் மேலே குறிப்பிடபட்டுள்ள சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு இதுவே சாட்சி" என்று காட்டமாக கூறியிருந்தார்.

 குஷ்பு சுறுக்

குஷ்பு சுறுக்

இதே கேள்வியைதான் பாஜகவின் குஷ்பும் கேட்டுள்ளார்.. தன்னுடைய ட்வீட்டில், "கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்... தமிழகத்தில் சட்டம் ஒழுங்கற்ற நிலை உள்ளது.. யாராவது அவரை முதல்வர் ஸ்டாலினை எழுப்பி உண்மையான படத்தை காட்ட முடியுமா? நீண்ட நாட்களாக உறக்கத்தில் இருந்துள்ளார்" என்று காட்டமாக முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார் குஷ்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+