திமுகவும் தவெகவும் ஒன்னு..மக்கள் தலையில் மண்னு! அரிசி வாங்குறதே கனவா மாறிடுச்சு! எல்.முருகன் அட்டாக்
கோவை: கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீரழிவு காரணமாக தமிழக மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் எனவும், கடந்த திமுக ஆட்சிக்கும் தற்போதைய தவெக அரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என முன்னாள் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
சமீபத்தின் தான் தனது மத்திய இணை அமைச்சர் பதவியையும் மாநிலங்களவை எம்பி பதவியையும் ராஜினாமா செய்வதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான எல்.முருகன்.

இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் எனவும், அதற்கு முன்னோட்டமாக தான் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் எல்.முருகன் என்கின்றனர் பாஜகவினர். ஏற்கனவே பல மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிலையில் தற்போது எல்.முருகன் ராஜினாமா பட்டியில் பட்டியலில் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
எல்.முருகன்
ராஜினாமா செய்த அரசியல் புள்ளிகள் கட்சிப் பணியாற்ற வேண்டுமென பாஜக தலைமை உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது கொங்கு மண்டலத்தில் கட்சிப் பணிகளை துவங்கி இருக்கிறார். அந்த வகையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான எல்.முருகன் வருகை தந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
விலைவாசி உயர்வு
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," விலைவாசி உயர்வால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக அரிசி விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருவதால் அரசு இப்பிரச்சனைக்கு தீர்வு காண முன் வர வேண்டும்.
சட்டம் ஒழுங்கு
அரிசி வாங்குறதே கனவா மாறிடும் போல. இந்த ஆட்சி பொறுப்புக்கு வந்து ஆறு மாதங்களாகியும் இன்னமும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரடையவில்லை. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழலே நிலவுகிறது. கடந்த திமுக ஆட்சிக்கும் தற்போதைய தவெக ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லாத நிலையே நீடிக்கின்றது.
சிறை கைதிகள்
தமிழகத்தில் சிறை கைதிகள் தப்பி செல்வது பார்த்தால் கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மேலும் மோசமாகியுள்ளது என்றே கூறலாம். எந்த அடிப்படையும் இல்லாமல் தேர்தல் ஆணையத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை வைத்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் போராட்டம் வியாபாரிகள் உள்ளிட்ட பலரையும் பாதித்து வருகிறது.
எஸ்ஐஆர்
எஸ்ஐஆர் மூலம் போலியான வங்கதேச வாக்காளர்களை நீக்கியதால் தான் மேற்குவங்கத்தில் அரசாங்கம் மாறியுள்ளது. தேர்தல் மூலம் கேரளத்தில், கர்நாடகாவில், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது எப்படி?" எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
