அதிமுகவில் இணைந்த ஒரே வாரத்தில் வெயிட்டான பதவி - மார்ட்டின் மனைவி லீமா ரோசுக்கு ஜாக்பாட்
கோவை: 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் என்றால் அரசியல் புள்ளிகள் கட்சி மாறுவது சாதாரணம் தான். பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்டின் மனைவி லீமா ரோஸ் ஐஜேகே கட்சியில் இருந்து விலகி, கடந்த வாரம் அதிமுகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த ஒரே வாரத்தில் அவருக்கு மாநில அளவில் பதவி வழங்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவியும், இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகியுமாக இருந்தவர் லீமா ரோஸ். சமீபத்தில் இவர்களின் மகன் ஜோ சார்லஸ், லட்சிய ஜனநாயக கட்சி தொடங்கி புதுச்சேரி அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அவரின் மருமகன் ஆதவ் அர்ஜுனா தவெகவில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். முன்னதாக ஜோ சார்லஸ் மற்றும் லீமா ரோஸ் பாஜகவில் இருந்தனர்.

அதிமுகவில் லீமா ரோஸ்
இந்நிலையில் லீமா ரோஸ் கடந்த ஜனவரி மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியிருந்தது. அவர் அதிமுகவில் லால்குடி தொகுதிக்கு விருப்பமனு தாக்கல் செய்திருந்தார் என்றும் தகவல் வெளியானது. எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமத்தமாக சந்தித்தேன். அதிமுகவில் இணையவில்லை என்று லீமா ரோஸ் விளக்கமளித்திருந்தார்.
ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஐஜேகே மாநில மாநாட்டில் லீமா கலந்து கொள்ளவில்லை. கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி அவர் திடீரென ஐஜேகே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். கட்சிக்காக கடுமையாக உழைத்தும் உரிய அங்கீகாரம் வழங்கவில்லை. உழைப்பை உதாசீனப்படுத்திகிறார்கள். அதனால் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று கூறியிருந்தார்.
வெயிட்டான பதவி
இதையடுத்து கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். கோவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஏற்பாட்டில் தான் அவர் அதிமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக அவர் அதிமுகவில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முன் வரிசையில் இருந்தார். சென்னையில் நேற்று நடைபெற்ற ஜெயலிலதா பிறந்தநாள் விழாவின்போது கூட லீமா ரோஸ் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.
கட்சியில் இணைந்த ஒரு வாரத்திலேயே லீமா ரோசுக்கு மாநில அளவில் வெயிட்டான பதவி வழங்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளி அறிவிப்பில், அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் லீமா ரோஸ் மார்ட்டின், இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
லீமா ரோசுக்கு மாநில அளவில் முக்கிய பதவி வழங்கியிருப்பது அந்தக் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்! -
மூணு தோல்வி அண்ணாமலை பெயரை தவிர்க்கவே போட்டியில்லை.. வாசகர் அங்கமுத்து ஆதங்கம் -
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா!









Click it and Unblock the Notifications