மேற்கு தொடர்ச்சி மலையில் தென்படும் அந்த உருவம்.. கோவை தடாகம் மக்களை பயமுறுத்தும் சிறுத்தை எச்சரிக்கை
கோவை: கோவை தடாகம் பகுதியையொட்டி உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த சிறுத்தை இப்பகுதியில் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஆடு, கோழி உள்ளிட்டவற்றை கொன்று சென்றது குறிப்பிடத்தக்கது.
கோவை நகர்ப் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி. வளம் நிறைந்த இந்த மலைத் தொடரில் சிறுத்தை, புலி, யானை, மான், காட்டுப் பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. வனப் பகுதியில் இருந்து வெளியேறும் இந்த விலங்குகளால் கோவையில் மனித - விலங்கு மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உணவு, குடிநீர் தேடி யானை, சிறுத்தை, காட்டுப் பன்றி உள்ளிட்டவை குடியிருப்புக்குள் புகுவது, தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவது உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் வனத் துறையினர் இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவது, வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் விலங்குகளை வனத்துக்குள் துரத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி பல்வேறு கிராமங்கள் உள்ளன. தடாகம், கணுவாய், மாங்கரை, ஆனைகட்டி, ஓணாப்பாளையம், தாளியூர், மருதமலை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள், காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகள், மான்கள் என பல்வேறு வன விலங்குகளில் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அதேபோல, இந்தப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டமும் அவ்வப்போது தென்பட்டு வருவதாக சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்கள் தெரிவித்து வருகின்றனர். சில நேரங்களில் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில், இன்று தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு பாறையின் மீது சிறுத்தை ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். தற்பொழுது அந்த வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குடியிருப்பு பகுதி மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் இருந்து சிறிது தூரத்திலேயே உள்ள மலையில் சிறுத்தை தென்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த சிறுத்தை ஊருக்குள் புகுந்து அசம்பாவிங்கள் ஏற்படுவதற்கு முன்பு வனத் துறையினர் அந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் தொடர் கோரிக்கை வைத்து வரும் அதே சமயத்தில், இப்பகுதி ரிசர்வ் ஃபாரஸ்ட் பகுதிக்குள் இருப்பதால் சிறுத்தை நடமாட்டம் இப்பகுதியில் இருப்பது மிகவும் இயல்பானது என்றும், தொடர்ந்து சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளை கண்காணித்து வருவதாகவும் வனத் துறையினர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடாகம் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றித் திரிந்த சிறுத்தை ஆடு, கோழி உள்ளிட்டவற்றை கொன்றது குறிப்பிடத்தக்கது. இதனால், அப்பகுதி மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
-
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications