இன்னைக்கே இந்த நிலையா.. போதையில் காரை ஓட்டி.. தலைகீழாக நடுரோட்டில் கவிழ்த்த இளைஞர்கள்.. கோவை அருகே
தொண்டாமுத்தூர் அருகே கார் விபத்தில் இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்
கோவை: கடையை திறந்த முதல்நாளே விபத்து ஏற்பட்டுவிட்டது.. போதையில் காரை ஓட்டி நிலையில் நடுரோட்டில் அந்த கார் தலைகீழாக கவிழ்ந்து விட்டது!! கோவை அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
Recommended Video
பலவித எதிர்ப்புகள் வந்தாலும் அரசு உறுதியாக இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடைகளை இன்று திறந்தது... சமூக விலகலை கடைப்பிடித்து சில இடங்களில் சரக்கு வாங்கினாலும், பல இடங்களில் சமூக விலகல் பின்பற்றப்படவே இல்லை.

மேலும் பயந்தபடியே வன்முறைகளும், விபத்துக்களும் நடக்க ஆரம்பித்துள்ளன.. மதுரை அலங்கநல்லூரில் கணவன் குடித்துவிட்டு வந்தார் என்பதற்காக அதிர்ச்சி அடைந்த மனைவியும், மகளும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துவிட்டனர்.. இப்போது ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் உள்ளனர்.
அதேபோல கோவை அருகே ஒரு விபத்து நடந்துள்ளது.. தொண்டாமுத்தூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் வடவள்ளியை சேர்ந்தவர் ரஞ்சித்.. இவர் தன்னுடைய நண்பர்கள் ஹரிஹரன், ஆண்டனி, நித்தின் ஆகியோருடன் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது.. பிறகு திரும்பவும் வீட்டிற்கு செல்லும்போது அப்பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு காரில் சென்றுள்ளனர். ரஞ்சித் தான் காரை ஓட்டினார்.
காரிலேயே தண்ணி அடித்தார்களா அல்லது மது கிடைத்த உற்சாகமா என்று தெரியவில்லை.. காரை வேகமாக ஓட்டி உள்ளார் ரஞ்சித்.. புதுப்பாளையம் அருகே வரும் அந்த கார் டயர் மடார் என வெடித்தது.. ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து கார் தலைகீழாக நடுரோட்டிலேயே கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.. நல்லவேளை.. காரில் இருந்த இளைஞர்களுக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.. அவர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொண்டாமுத்தூர் போலீசார் விரைந்து வந்தனர்.. விபத்து குறித்து விசாரித்தும் வருகின்றனர். இதில், ரஞ்சித் தவிர மற்ற 3 பேரும் குடிபோதையில் இருந்தது தெரிந்தது.. காரில் நிறைய மதுபானங்கள் இருந்ததும் பறிமுதல் செய்யப்பட்டது. எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
பல நாட்களுக்கு பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே துர்சம்பவங்கள் நடந்து வருவது மக்களை கவலைக்குரியதாக்கி வருகிறது.
-
டாஸ்மாக் ஊழியர்கள் 200 பேர் சஸ்பெண்ட்.. பாட்டிலுக்கு 10 ரூபா ஒழிக்காம விடமாட்டேன்.. விஜயின் சபதம்! -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை -
அவிநாசி சாலையில் 5 நாட்களுக்கு அதிரடி மாற்றம்.. கோவை பயனீர் மில் கிட்ட அதை கவனிச்சீங்களா? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications