எங்கப்பா டயரையே காணோம்.. கோவை அருகே புத்தம்புது ரோட்டில் புதைந்த செங்கல் லாரி.. பெரும் பரபரப்பு!
கோவை: கோவை அருகே சுண்டக்காமுத்தூர் வாய்க்கால்பாளையம் பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலையில் லாரியின் சக்கரங்கள் திடீரென சாலையில் புதைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் - புட்டுவிக்கி சாலையில் வாய்க்கால்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இப்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. அங்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கோவை சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை பெய்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் பழனியில் இருந்து சுமார் 5 ஆயிரம் செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி வாய்க்கால் பாளையம் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய தார் சாலையில் புதைந்தது. லாரியின் முன் டயர் ரோட்டில் புதைந்ததை அறிந்து டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு குதித்தார்.
தொடர்ந்து, பின் புற டயரும் தார் ரோட்டில் இறங்கியது. இடது புறத்தின் முன் இரண்டு சக்கரங்களும் தார் ரோட்டில் புதைந்ததால் லாரி அப்படியே சாலையில் சாய்ந்து நின்றது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் பொக்லைன் மூலம் சாலையில் புதைந்த லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்
ஆனால் அதிக பாரம் இருந்ததால் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து புட்டுவிக்கி சாலைக்கு ராட்சத கிரேன் கொண்டுவரப்பட்டு, வேறு லாரியில் செங்கல்கள் மாற்றப்பட்டு லாரியை மீட்கும் முயற்சி நடைபெற்றது. நடுரோட்டில் புதைந்து கிடந்த சரக்கு லாரியை பத்திரமாக மீட்டு, அங்கு போக்குவரத்தை சீர்படுத்தினர்.
தார் ரோடு போட்ட சில நாட்களிலேயே லாரி நடு ரோட்டில் புதைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தரமற்ற முறையில் சாலைகள் போடப்படுவதாகவும், பயணிக்கும் வாகன ஓட்டிகள் உயிர் அச்சத்துடனே போக வேண்டி இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications