நாளை மறுநாள் கோவை வரும் முதல்வர் மோகன் யாதவ்.. மபி ஐஏஎஸ் ஈரோடு சிபி சக்ரவர்த்தி மேஜர் பிளான்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாட்டை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்களை தங்கள் மாநிலங்களில் முதலீடு செய்ய வைக்க உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், குஜராத்,ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் அதிக ஆர்வம் காட்டுகினற்ன. இந்த சூழலில் மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் நாளை மறுநாள் (25ம் தேதி) கோவைக்கு வருகிறார். ஈரோட்டைச் சேர்ந்த மபி ஐஏஎஸ் அதிகாரி இந்த திட்டத்தை ஒருங்கிணைத்துள்ளார்.

வட மாநிலங்களை ஒப்பிடும் போது தென்னிந்திய மாநிலங்கள் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளன. அதேநேரம் நாட்டில் பல்வேறு மாநிலங்களை ஒப்பிடும் தமிழ்நாடு அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே வளர்ச்சி என்று சொல்லிவிட முடியாது.

Coimbatore Madhya Pradesh IAS

இத்தனைக்கும் தண்ணீர் வசதி, மனித வளம், குறைவான ஊதியம், நிலத்தின் மதிப்பு குறைவு என எல்லா வகையான அட்வான்டேஜ் இருந்தும் , வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் தொழில் தொடங்குவதையே பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் விரும்புகின்றன. ஐடி நிறுவனங்கள் என்றால் பெங்களூர், ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களையும். ஆட்டோ மொபைல் மற்றும் செல்போன் மற்றும் பல்வேறு வகையான தொழிற்சாலைகள் என்றால் தமிழ்நாட்டையும் முதலீட்டாளர்கள் விரும்புகிறார்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை என்னதான் வளர்ந்திருந்தாலும், சிறிய வகை முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் என்று பார்த்தால் கோவை தான் முதலிடம் இருக்கும். கேரளாவின் நுழைவு வாயிலான கோவையில் உள்ள தொழில் வளர்ச்சி பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களில் கூட இல்லை. கோவையில் மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி, திருப்பூர் வழித்தடத்தில் மெமு ரயில்களை அதிக அளவில் இயக்குவது, சத்தி அவினாசி வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்குவது போன்ற உள்கட்டமைப்பை மேம்படுத்தினால், இன்னும் 10 அல்லது 15 வருடங்களில் கோவையின் வளர்ச்சி கற்பனைக்கும் எட்ட முடியாத அளவிற்கு வரும்.

அந்த அளவிற்கு தொழில் ரீதியாக கோவை வேகமாக வளர்ந்து வருகிறது. கோவையில் ஏராளமான தொழில் முனைவோர்கள் அதிக அளவில் தொழில் நிறுவனங்களை ஆரம்பித்துவருகிறார்கள். இந்நிலையில் வட மாநிலங்களின் கவனம் கோவை முதலீட்டாளர்கள் மேல் அதிகம் திரும்பி உள்ளது.

குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் முதலீட்டாளர்களை தங்கள் மாநிலங்களில் தொழில் தொடங்க வைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரியில் உத்தரப் பிரதேச மாநில அரசு, தங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்க தமிழ்நாட்டு தொழில் துறையினருக்கு அழைப்பு விடுத்தது. இதற்காக, இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு (பிக்கி), உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநாட்டை சென்னையில் நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக, பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மத்திய பிரதேசத்தின் சார்பிலும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் பணி தற்போது தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டின் தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்களை மத்திய பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் கோவையில் நாளை மறுநாள் சந்தித்துப் பேச உள்ளார். தனியார் நிறுவனம் மூலமாக இந்த நேரடி சந்திப்பு கோவை லீ மெரிடியன் ஓட்டலில் வரும் வியாழக்கிழாமை (ஜுலை 25) காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாட்டின் தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு தனித்தனியாக மத்திய பிரதேச அரசின் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (எம்பிஐடிசி) அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கான உதவிகளை மத்திய பிரதேசே அரசுக்கு இந்திய தொழிலக கூட்டமைப்பு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கலந்துரையாடலில் பங்குபெற விரும்புவோர் எம்பிஐடிசி இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள். இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் 2008-ம் ஆண்டு ம.பி. மாநில பிரிவின் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த சிபி சக்கரவர்த்தி இருக்கிறார். ஈரோட்டைச் சேர்ந்தவர் இவர், இக்கூட்டத்தை ஒருங்கிணைப்பதில் எம்பிஐடிசியின் முன்னாள் இணைச் செயலாளரும், மெட்ரோ திட்டநிர்வாக இயக்குநருமான சிபி சக்ரவர்த்தி செயலாற்றி வருகிறார்.

கோவையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்வில் பல்வேறு சிறப்பு சலுகை மற்றும் மானியங்கள் அறிவிக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+