தமிழ்ப்புதல்வன் வந்தாச்சு.. மாணவர்களுக்கு 1000 ரூபாயும் வந்தாச்சு.. சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்
கோவை: தமிழகத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்த "தமிழ்ப்புதல்வன்" திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று கோவையில் துவங்கி வைத்துள்ளார்.. இதையடுத்து, உயர்கர்லவி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் ரூ.1000 உதவித்தொகையையும் வழங்கினார் முதல்வர்.
தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது. காலை உணவுத்திட்டம், உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்துமே மாணவர்களின் வளர்ச்சிக்கு மிகுந்த உதவியாக இருந்து வருகிறது.

அதிலும், கல்லூரிகளில் சேரும் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் 3 லட்சம் மகளிருக்கு மேல் பயன்பெற்று வருகிறார்கள்.. கடந்த நிதியாண்டில் மட்டும் 2,09,365 மாணவியர்களும், 2023-2024-ஆம் நிதியாண்டில் சுமார் 64,231 மாணவிகள் கூடுதலாக இணைந்து 2,73,596 மாணவியர்களும் பயனடைந்துள்ளனர்.
எண்ணிக்கை அதிகரிப்பு: இந்த வரிசையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய திட்டம்தான், "தமிழ்ப்புதல்வன்" திட்டமாகும்.. பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்திட, அவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
அதாவது, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படவுள்ளது..
ஆதார் அட்டை: இதற்கு, ஆதார் அட்டை, ஆதார் அட்டை இணைக்கப்பட்ட ஜாயிண்ட் வங்கி கணக்கு, அரசு பள்ளியில் படிப்பதற்கான ஆவணங்கள் இருந்தாலே போதும்.. அதேபோல, தமிழகத்திலுள்ள கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்பவராகவும், பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசு அங்கீகரித்ததாகவும் இருத்தல் வேண்டும்.. பிற மாநிலங்களில் IIT, NIT, IISER போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.
ஆனால், தொலைதூரக்கல்வி மற்றும் அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இந்த ஊக்கத்தொகை பெற முடியாது..
வரவு வைக்கப்படும்: அதன்படியே, அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, கல்லூரிகளில் சேர்ந்துள்ள 3 லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் மாதந்தோறும் ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த திட்டத்திற்காக 360 கோடி ரூபாயை இந்த ஆண்டிற்கு அனுமதித்துள்ள நிலையில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தை இன்றைய தினம் கோவை அரசு கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின், தொடங்கி வைத்தார்.. அப்போது உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் ரூ.1000 உதவித்தொகையையும் வழங்கினார் முதல்வர்.. உதவித்தொகையை பெற்றுக் கொண்ட மாணவர்கள், முதல்வருக்கு தங்கள் நன்றியை மனமார தெரிவித்து கொண்டனர்.
தொடர்ந்து இந்த விழாவில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறை ஆகிய துறைகளுக்கான புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications