4 மாசமாக வீட்டிற்குள் கிடந்த எலும்புகூடு.. தேங்காய் சிரட்டையை போட்டு என்ஜினியர் உடலை எரித்த கும்பல்!
என்ஜினியர் எரித்து கொன்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்
கோவை: இறந்த சடலம் 4 மாதமாக வீட்டுக்குள்ளேயே கிடந்துள்ளது.. தேங்காய் சிரட்டை, பேப்பர் போட்டு.. மண்ணெண்ணெயை ஊற்றி என்ஜினியரை எரித்து கரிக்கட்டையாக்கி உள்ளனர் மர்ம நபர்கள்!
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த தம்பதி சக்திவேல் - அழகு.. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்... பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார் சக்திவேல்.. 42 வயதாகிறது..3 வருஷங்களுக்கு முன்பு கோவைக்கே வந்து வேலை பார்த்தார் சக்திவேல்.

இவர் கோவை வந்ததில் இருந்தே மனைவியுடன் அடிக்கடி தகராறு வந்து கொண்டே இருந்தது. இதனால் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். மனைவியும் மகளை அழைத்து கொண்டு தனியாக போய்விட்டார்.
இதனால் சக்திவேல் தனி வாழ்க்கையை வாழ்ந்தார்.. சொந்த பந்தங்களை வெறுத்தார்... யாருடனும் பேசாமல் ஒதுங்கியே இருந்தநிலையில், தன் அக்காவிடம் மட்டும் அடிக்கடி போன் பேசுவார்.. ஆனால் 6 மாசமாக அக்காவுக்கு போனும் பண்ணவில்லை.. இதனால் தம்பிக்கு என்ன ஆனதோ என்று பயந்து, அவர் தன் மகன் தினேஷை கோவை அனுப்பி வைத்து, என்ன ஏதென்று பார்க்க சொன்னார்.
தினேஷ் சக்திவேல் வீட்டுக்கு வந்தால் கதவு திறந்து கிடந்தது.. அதனால் உள்ளே சென்று பார்த்தபோது, சக்திவேல் தீயில் எரிந்து கருகி எலும்புக்கூடாக கிடந்தார்.. இதை பார்த்து அலறிய தினேஷ், உடனடியாக குனியமுத்தூர் போலீசில் புகார் தந்தார். போலீசார் விரைந்து வந்து சக்திவேல் சடலத்தை பார்வையிட்டனர்.. எப்படியும் இவர் இறந்து 4 மாதங்களுக்கு மேல் இருக்கலாம் என்கிறார்கள். மண்ணெண்ணெய் ஊற்றி, தேங்காய் சிரட்டை, பேப்பர்களை கொண்டு உடலை எரித்துள்ளனர்.
யார் கொலை செய்தார்கள் என தெரியவில்லை.. இதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சக்திவேலுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் ஏதோ தகராறு இருந்துள்ளதாக சொல்கிறார்கள். அந்தபிரச்சனை காரணமா அல்லது மனைவியை பிரிந்து வாழ்வதால் ஏதாவது பெண் விவகாரமா என்றெல்லாம் தெரியவில்லை... ஆனால் 4 மாதமாக வீட்டுக்குள்ளேயே என்ஜினியர் சடலம் கிடந்தது பெரும் பரபரப்பை தந்துள்ளது.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications