“பொற்கொல்லரை” அவமதிச்சுட்டாங்க.. கோவை மேல்பாலத்தில் கண்ணகி ஓவியத்தில் தார் பூச்சு! கைது செய்த போலீஸ்
கோவை மேம்பால தூண்களில் வரையப்பட்ட கண்ணகி ஓவியங்களின் தார் பூசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: காந்திபுரம் மேம்பாலத்தின் தூண்களை அழகுபடுத்த வரையப்பட்டு இருக்கும் ஓவியங்களின் தார் பூசிய விஷ்வஜனா முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பின் நிறுவனரை போலீசார் கைது செய்து உள்ளனர். தமிழ் இலக்கியத்தின் ஐம்பெருங்காப்பியங்களின் ஓவியங்களை அந்த நபர் அழித்ததது ஏன்?
தமிழ்நாடு முழுவதும் மேம்பாலங்களின் தூண்களின் அரசியல் கட்சிகள், சினிமா நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு போஸ்டர்களை ஒட்டுவதால் அவை பொழிவிழந்து காணப்படுகிறது.
இதற்கு அரசு, உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் தடை விதிக்கப்பட்டாலும் மீறி போஸ்டர்களை ஒட்டுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இதனால் கால்நடைகளும் அதை சாப்பிட்டு பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றன.

ஓவியங்கள்
இந்த நிலையில், மேம்பாலங்கள், அரசு அலுவலக சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்கும் வகையில் அழகிய ஓவியங்கள் வரையப்படுகின்றன. அந்த வகையில் கோவையிலும் மேம்பாலத்தின் தூண்களிலிலும் சுவர்களிலும் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு அவை பொழிவோடு காட்சித் தருகின்றன.

காந்திபுரம் மேம்பாலம்
குறிப்பாக கோவை காந்திபுரத்தில் உள்ள மேம்பாலத்தின் தூண்களில் தமிழ்நாட்டின் வரலாறு, இலக்கியத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் அருகே உள்ள 4 தூண்களில் ஐம்பெரும் காப்பியங்களின் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.

ஐம்பெரும் காப்பியங்கள்
சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, குண்டலகேசி, மணிமேகலை, வளையாபதி ஆகிய ஐந்து பெரும் காப்பியங்களின் கதைகள் ஓவியமாக மேம்பால தூண்களில் வரையப்பட்டு இருப்பது பலரை கவர்ந்தது. இந்த நிலையில் இந்த ஓவியங்கள் பொற்கொல்லர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கோவலன் இறப்புக்கு காரணம்
சிலப்பதிகாரத்தில் கோவலன் இறந்ததற்கும் பொற்கொல்லர்களே காரணம் என்றும் அவர்கள் திருடியதாகவும் தவறாக சித்தரித்து ஓவியங்கள் வரையப்பட்டதாக விஷ்வஜனா முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பின் சார்பில் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் அந்த அமைப்பின் நிறுவனரான வேல்முருகன் அந்த ஓவியங்களை தார் பூசி அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைதான வேல்முருகன்
இதனால் பொழிவொடு இருந்த அந்த இடம் தார் பூசப்பட்டு மீண்டும் அலங்கோலமாக மாறி இருக்கிறது. இந்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் கண்ணகி ஓவியத்தில் தார் பூசிய விஷ்வஜனா முன்னேற்றக் கழக நிறுவனர் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications