கோவை சிறுமி பலாத்காரம் செய்து கொலை - குண்டர் சட்டத்தில் குற்றவாளி கைது
கோவையில் சிறுமி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோவை: 2 பவுன் நகைக்காக 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் தேதி முதல் மாயமானார். மகளைக் காணவில்லை என்று தேடிப்பார்த்த மாணவியின் தாயார், கோவை கிழக்கு பகுதி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு மாணவியை தேடி வந்தனர்.
சரவணம்பட்டி யமுனா நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் கிடந்த சாக்குமூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த பொதுமக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து சாக்குமூட்டையை திறந்து பார்த்தபோது, அது காணாமல் போன மாணவி என்பது உறுதியானது. இதையடுத்து காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி கொலை
சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் கை, கால்கள் கயிறுகளாலும், வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்தது.
மாணவியை யாராவது கொலை செய்து விட்டு, உடலை இங்கு வீசியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவியின் செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர் அதில், அவர் யாருக்கெல்லாம் போன் செய்துள்ளார். அவருடன் கடைசியாக பேசியவர்கள் யார் யார் என்று தேடினர்.

கொலை செய்த கட்டிட தொழிலாளி
அப்போது மாணவி, மாயமான நாளன்று கடைசியாக அதே பகுதியை சேர்ந்த கட்டித் தொழிலாளியான முத்து குமார்(வயது 44) என்பவரிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். முதலில் காவல்துறையினர் கேள்விகளுக்கு மாறி, மாறி பதில் அளித்த முத்துக்குமார், கடைசியில் தான் மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி முட்புதரில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

2 பவுன் நகை
இறந்த மாணவியின் அம்மாவிற்கும் கட்டிடத் தொழிலாளி முத்துக்குமாருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. முத்துக்குமார் ஏற்கனவே திருமணமானவர். தனது குடும்ப செலவுக்கு பணம் தேவைப்படுவதாக கூறி மாணவியின் தாயாரிடம் 2 பவுன் நகையை கடனாக வாங்கிச் சென்றிருந்தார். அந்த நகையை அவர் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட சிறுமி
சிறுமியின் அம்மா ஊரில் இல்லாத நேரத்தில் மாணவியை திட்டம் போட்டு தனது வீட்டிற்கு வரச்சொன்னார் முத்துக்குமார். அப்போது சிறுமியிடம் தவறாக முத்துக்குமார் நடந்து கொண்டதாக தெரிகிறது. சிறுமி கத்தி கூச்சலிட்டவே உடனே மாணவியின் வாயில் துணியை திணித்து கீழே தள்ளிய முத்துக்குமார், பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

சிறுமி உடல்
வீட்டில் இருந்து சாக்குமூட்டையில் மாணவியின் உடலை கட்டி குப்பை கிடங்கில் வீசி விட்டு அமைதியாக எதுவும் தெரியாதது போல இருந்து விட்டார். மகளை காணாத தாயார், முத்துக்குமாரிடம் தெரிவித்துள்ளார். காவல் நிலையத்திற்கு சென்று புகாரும் கொடுத்து விட்டு தேடினார். மாணவியின் உடலை கைப்பற்றிய போது தாயார் கதறி அழுத போது தானும் அழுது நாடகமாடியுள்ளார்.

குற்றவாளிக்கு குண்டர் சட்டம்
சிறுமியை கொன்ற வழக்கில் சரவணம்பட்டி காவல்நிலைய போலீசார் முத்துகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், முத்துக்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள அவரிடம் காவல்துறையினர் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications