வெட்டியா இருக்காம வேலைக்கு போ என்று சொன்ன அம்மா... அடித்துக்கொன்ற மகன்- பொள்ளாச்சி கொடூரம்

படிச்சிட்டு வேலைக்கு போகாம வெட்டியா இருக்கியே என்று திட்டிய அம்மாவை கட்டையால் அடித்து மண்டையை உடைத்து கொலை செய்திருக்கிறான் ஒரு மனநோயாளி மகன், பொள்ளாச்சியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி: பிஎஸ்சி படித்து விட்டு வீட்டிற்குள் வெட்டியாக இருந்த மகனை வேலைக்கு போ என்று சொன்ன காரணத்திற்காக கட்டையால் அடித்து மண்டையை பிளந்து கொன்றிருக்கிறார் ஒரு மகன். பொள்ளாச்சியில் இந்த படுபாதக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் செல்லம்மாள் என்பதாகும். 55 வயதான அவருக்கு மவுனகுருசாமி என்ற மகன் இருக்கிறார். பிஎஸ்சி படித்த பட்டதாரி. பொள்ளாச்சியை அடுத்த ஊஞ்சவேலம்பட்டியில் வசித்து வந்த இவர்களுக்கு அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

Man killed Mother near Pollachi

மவுனகுருசாமியின் அப்பாவின் பெயர் பெருமாள். கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்து போனார். இதனால் மனநிலை பாதிக்கப்பட்டது போல அமைதியாக இருந்துள்ளார். யாருடனும் அதிகம் பேசாமல் வீட்டிற்குள்ளேயே இருந்ததால் அம்மாவிற்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி சண்டை வருமாம்.

இரு தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த செல்லம்மா, வழக்கம் போல மகனிடம் சண்டை போட்டிருக்கிறார். கூடவே தனது 3வயது பேரப்பிள்ளையையும் அழைத்து வந்திருக்கிறார். வேலைக்கு போகாம வெட்டியா இருக்கியே, சொந்தக்காரங்க பேசுறாங்க என்று செல்லம்மாள் கூறவே ஆத்திரமடைந்த மவுனகுரு அருகில் இருந்த நாற்காலியை எடுத்து அம்மாவின் தலையில் அடித்திருக்கிறான்.

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த செல்லம்மாள் உயிரிழந்து விட்டதாக தெரிகிறது. இந்த சண்டையைப் பார்த்து குழந்தை வீறிட்டு அழவே மவுனகுரு தப்பி ஓடி விட்டார். பக்கத்து வீட்டுக்காரர் திருப்பதி என்பவர் நடந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய மவுன குருவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+