மருதமலை கோயிலில் நாளை குடமுழுக்கு.. இன்று முருகனின் வெள்ளி வேல் திருட்டு.. யார் அந்த சாமியார்?
கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நாளை நடக்கவுள்ள நிலையில், ரூ.4 லட்சம் மதிப்பிலான வெள்ளி வேல் திருடப்பட்டுள்ளது. சாமியார் வேடத்தில் வந்த ஒருவர் வெள்ளி வேலினை திருடும் சிசிடிவி காட்சிகள் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்க் கடவுள் முருகனின் 7ஆம் படை வீழு என்று அழைக்கப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் குடமுழுக்கு நாளை நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று முதலே அடுத்த 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் குடமுழுக்குக்கான ஏற்பாடுகளும் படுவேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாளை குடமுழுக்கு நடக்கவுள்ள நிலையில், இன்று மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள தியான மண்டபத்தில் வெள்ளி வேல் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் மருதமலை கோயிலில் குடமுழுக்கு நடக்கவுள்ளதால், கோயிலின் அனைத்து பகுதிகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனாலும் மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள தியான மண்டபத்தில் உள்ள வெள்ளி வேல் திருடப்பட்டுள்ளது. மருதமலை அடிவாரத்தில் வேல் கோட்டம் என்ற மண்டபம் உள்ளது. இதில் முருகனை வேல் ரூபத்திலேயே பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். மூலவருக்கு முன்பாக சுமார் இரண்டரை அடி வெள்ளியால் செய்யப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான வேலினை வழிபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இந்த வேல் திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் பிற்பகல் சுமார் 12 மணியளவில் சாமியார் வேடத்தில் வந்த திருடன் ஒருவன் வெள்ளி வேலினை எடுத்து செல்லும் காட்சிகள் உள்ளது. நாளை குடமுழுக்கு நடக்கவுள்ள நிலையில், இன்று முருகனின் வெள்ளி வேல் திருடப்பட்டிருப்பது பக்தர்களிடையே சோகத்தை அளித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஏராளமான போலீசார் பாதுகாப்பையும் மீறி முருகனின் வெள்ளி வேலினை திருடியது எப்படி என்று பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முருகனின் வேலினை திருடிய நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications