இனிக்க இனிக்க பேசி.. மொத்தமாய் ஆட்டைய போட்ட மேட்ரிமோனியன் காதலன்! கோவை சத்யாவுக்கு நேர்ந்த கதி!
கோவை: திருமண தகவல் இணையதளம் மூலம் அறிமுகமாகி ஏமாற்றி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு 10 லட்சம் ரூபாய் மற்றும் 2.5 சவரன் தங்க நகையை பெற்று மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த இளைஞர் மீது திண்டுக்கல்லை சேர்ந்த இளம் பெண் புகார் அளித்துள்ளார். கணவர் இல்லாதவை பயன்படுத்தி மோசடி செய்த இளைஞர் மேலும் பல பெண்களை ஏமாற்றி இருக்கலாம் எனவும் பகீர் புகார் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் திருமண மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்கள், திருமண பதிவு இணையதளங்கள் மூலம் இந்த மோசடிகள் அரங்கேறி வருகிறது.
திருமணமான பெண்கள் கணவனை இழந்த பெண்கள் விவாகரத்தான பெண்களை குறி வைத்து மோசடி கும்பல் திருமணம் செய்வதாக கூறி அவர்களிடம் நகை பணம் ஆகியவற்றை மோசடி செய்வதாக காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகின்றன. எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதனை உண்மையாக்கும் வகையில் தான் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் பழகிய இளைஞர் இழப்பினை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரிடம் நகை மற்றும் பணத்தை மோசடி செய்திருக்கிறார். என்ன நடந்தது? திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சத்யா(32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவை ஒண்டிப்புதூரில் 2 மகன்களுடன் வசித்து துணி வியாபாரம் செய்து வருகிறார்.
தனக்கு திருமணமாகி 16வருடங்கள் ஆகிறது 2 மகன்கள் உள்ளனர். அவரது கணவர் 2022 ஆண்டில் இறந்து விட்டார். இதனையடுத்து சத்யாவின் சகோதரி அவருக்கு மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் மணமகன் தேடினார். இந்நிலையில், இணையதளத்தில் கொடுத்து இருந்த செல்போன் எண் மூலம் கடந்த ஜனவரி மாதம் சென்னையை சேர்ந்த 38 வயது வாலிபர் தொடர்பு கொண்டு தனக்கு திருமணமாகவில்லை என்றும், அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
அதன் பின்பு இருவரும் பழகி வந்துள்ளனர். அந்த சமயங்களில் அவர் தொழில் தேவைக்காக எனக் கூறி அந்த பெண்ணிடம் ரூ. 10 லட்சம் மற்றும் 2.5 பவுன் நகை வாங்கினார். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் இளம்பெண்ணின் வீட்டுக்கு வந்த அவர் கட்டாயப்படுத்தி உறவு கொண்டிருக்கிறார். பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.
நாட்கள் செல்ல அந்த பெண்ணிடம் பழகுவதை தவிர்த்து வந்தார். அவர் குறித்து விசாரித்த போது அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும், இதேபோல் வேறு ஒரு பெண்ணை ஏமாற்றியதாகவும் காவல் நிலையத்தில் புகார் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டது குறித்தும், பணம், நகை குறித்து கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் விசாரித்த போது அந்த இளைஞரின் நடவடிக்கைக்கு அவரது பெற்றோரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. தன்னிடம் பழகி ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நகை பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும், இதுபோல மேலும் பல பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்க அந்த இளைஞன் மீது உறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த இளம் பெண் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications