நிலமுள்ள கோவை விவசாயிகளுக்கு அதிகபட்ச விலை.. முத்தான 3 ஹேப்பி நியூஸ்.. கோயம்புத்தூருக்கு சர்ப்ரைஸ்
கோவை: தொழிற்சாலைகள் அமைக்க நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு அதிகபட்ச விலை வழங்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்திருக்கிறார்.. தொழிற்சாலைகள் அமைக்க இங்குள்ள நில உரிமையாளர்கள், நிலத்தை முன் வந்து தந்தால், அரசு மதிப்பீட்டின்படி அந்த அதிகபட்ச விலை அவர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதி தெரிவித்திருக்கிறார்.
கோவை மாவட்டம், சூலூர் தாலுகா வாரப்பட்டி ஊராட்சியில் 370 ஏக்கர் பரப்பில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்க கூடிய தொழிற்சாலைகள் அடங்கிய ராணுவத்தொழில் பூங்கா அமையவிருக்கிறது..

தொழிற்சாலைகள்: இதற்கான ஆணைகளை தமிழக முதல்வர் தொழிற்சாலை அமைக்கும் உரிமையாளர்களிடம் வழங்க உள்ள நிலைகள், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற் பூங்கா இடத்தை தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பார்வையிட்டார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் சொன்னதாவது:
ஒட்டுமொத்த தமிழகத்தின் பரவலான வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் தமிழக முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்... தமிழ்நாடு முழுவதுமே, தொழிற்கூடங்கள் வேலை வாய்ப்புகள் ஆகியவை அமையும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.
ஏர்போர்ட்: கோவை வாரப்பட்டி ஊராட்சியில் அமைய உள்ள இந்த தொழில் பூங்கா தொழில்துறையில் மிகப் பெரிய வளர்ச்சியை உருவாக்கும்... தொழில் பூங்காவிற்கான நீர் ஆதாரங்களை திருப்பூர் மாவட்டத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பெறப்பட உள்ளது. தொழிற்சாலைகள் அமைக்க இங்குள்ள நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை தாமாக முன் வந்து வழங்கினால் அரசு மதிப்பீட்டின்படி அதிகபட்ச விலை அவர்களுக்கு வழங்கப்படும்.
விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழக அரசின் நிதியிலிருந்து 2 ஆயிரம் கோடி நில உரிமையாளர்களிடம் நிலங்களை மீட்டு மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளோம். ஆனாலும், இதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளாமல் மத்திய அரசு கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, தொழில் பூங்காவிற்கான நீர் ஆதாரங்களை திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பெறவுள்ளோம்.. இந்த தொழில் கூடத்தில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வெளியேறாமல் மறு சுழற்சி செய்து பயன்படுத்தப்படும்.
அரசு நிதி: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து 2,000 கோடி ரூபாய் நில உரிமையாளர்களுக்கு கொடுத்து அவர்களது நிலங்களை கையகப்படுத்தி ஒன்றிய அரசிடம் ஒப்படைத்துள்ளோம். இருந்தும் இதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் ஒன்றிய அரசு கிடப்பில் போட்டுள்ளது" என்றார்.
தொழிற்சாலைகள் அமைக்க இங்குள்ள நில உரிமையாளர்கள் நிலத்தை வழங்கினால் அரசு மதிப்பீட்டின்படி அதிகபட்ச விலை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதும், ராணுவ தளவாட பூங்காவுக்கான பணிகள் ஆரம்பமாகி உள்ளதும், நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த ஏர்போர்ட் விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பும், என மொத்தம் 3 அறிவிப்புகள் கோயம்புத்தூர் மக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications