Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெட்ரோ ரயில் திட்டம் புறக்கணிப்பு விவகாரம்.. மோடி வரும் நாளில் ஆடிப்போன கோவை

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி கொடுக்காமல் மாற்றான் தாய் மனப்பான்மையில் நடந்து கொள்வதாக புகார் உள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கோவை மாவட்டக் குழுவினரும் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தகுதியான நகரங்கள் கொண்ட பட்டியலை கடந்த 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 19 இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்திருந்தது. புனே, கொச்சி, கோவை ஆகியவை இடம் பெற்றிருந்தன.

metro-scheme-various-organizations-protest-in-coimbatore-condemning-the-boycott-of-the-metro-rail

கொச்சி மற்றும் புனேவில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. கோவைக்கு மட்டும் கடந்த 14 வருடங்களாக மெட்ரோ ரயில் திட்டம் கானல் நீராகவே உள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த கடந்த 2017 ஆம் ஆண்டு கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். 2021 தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூ.6,683 கோடி மதிப்பில் கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவித்த நிதி ஒதுக்கப்படவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அங்கு நீண்ட நாட்களாக ஒப்புதல் வழங்காமல் காத்திருப்பில் இருந்த நிலையில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் குறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியதாவது: "கோவை, மதுரை மெட்ரோ மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு புறக்கணித்து, திட்ட அறிக்கை திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது. 2011 ம் ஆண்டில் ஒன்றிய அரசு 21 நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்தது. அதில் 16வது இடத்தில் கோவை இருந்தது.

கோவைக்கு பின்னால் இருந்த கொச்சி, பட்னா ஆகிய மெட்ரோ ரயில் திட்டம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால், அந்த நகரங்களை விட மக்கள் தொகை அதிகமுள்ள கோவையில் இத்திட்டம் அமல்படுத்தவில்லை. மக்கள் தொகையைக் காரணம் காட்டி, கோவைக்கு மெட்ரோ திட்டம் புறக்கணிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கோவையை விட மக்கள் தொகை குறைவாக உள்ள ஆக்ரா, போபால் ஆகிய நகரங்களில் மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மோடி அரசு தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளது. இந்த நிலையில், கோவைக்கு பிரதமர் மோடி வருகையை கண்டிக்கிறோம். பிரதமர் மோடி கோவை, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதியளிக்க வேண்டும்" என்று கூறினார்.

DYFI ஆர்ப்பாட்டம்:

இதேபோல, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கோவை மாவட்டக் குழுவினரும் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தின் மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் மக்கள் தொகை குறைவாக உள்ளது என்று காரணம் கூறி மெட்ரோ திட்டத்தை மறுத்த ஒன்றிய அரசாங்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+