நாங்க கேட்டது வேற.. ஆனால் இரட்டை ஆணவ கொலை வழக்கில் நீதிபதி அதிரடி முடிவு – அரசு வழக்கறிஞர்
கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆணவ கொலை வழக்கில், உயிரிழந்த இளைஞரின் அண்ணன் வினோத்துக்கு மரண தண்டனை விதித்து கோவை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. அவரது மகன் கனகராஜ். இவர் உருளைக்கிழங்கு மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஓராண்டுக்கு மேலாக காதலித்து வந்தனர். அதற்கு எதிர்ப்பு எழுந்ததால் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இரண்டு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து பிரித்து வைத்தனர். இதனிடையே கனகராஜின் தந்தை அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக, அவர்கள் இருவரையும் வெள்ளிப்பாளையம் அருகே ஓர் இடத்தில் தங்க வைத்துள்ளார். அங்கு கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியா சில நாட்கள் ஒன்றாக இருந்துள்ளனர். இருப்பினும் கனகராஜின் அண்ணன் வினோத் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2019 ஜூன் 28 ஆம் தேதி அவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு சென்ற வினோத், வர்ஷினி பிரியாவை திருமணம் செய்ய கூடாது என்று கனகராஜிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு மறைத்து வைத்திருந்த அரிவாளால் கனகராஜை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கழுத்து, கை மற்றும் தலை பகுதியில் பலத்த வெட்டுப்பட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வர்ஷினி பிரியாவையும் வினோத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான வினோத் காவல்துறையிடம் சரணடைந்தார். பட்டியலின பெண்ணை காதலித்த காரணத்தால் தன் சொந்த தம்பியை வெட்டி கொலை செய்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரட்டை ஆணவ படுகொலை வழக்கு விசாரணை கோவை பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி மீதான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த ஜனவரி 23 ஆம் தேதி வினோத் குமார் தான் வழக்கின் முக்கிய குற்றவாளி என்று நீதிபதி அறிவித்தார்.
வினோத் குமாருடன் சேர்த்து கந்தவேல், ஐயப்பன், சின்ராஜ் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆனால் கூட்டு சதிக்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தனர். இந்நிலையில் அதற்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன், வர்ஷினி பிரியாவின் அம்மா அமுதா தரப்பில் வழக்கறிஞர் ச.பாலமுருகன் வாதிட்டனர். அப்போது வினோத் குமாருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி விவேகானந்தன் உத்தரவிட்டார்.
இதுகுறித்து வழக்கறிஞர் ப.பா. மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வீட்டுக்குள் அத்துமீறி நுழைவது, ஆயுதங்களால் தாக்குவது, வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று பாதிக்கப்பட்டவர், குற்றவாளி, அரசு ஆகிய மூன்று தரப்பிலும் நீதிபதி விசாரணை நடத்தினார். இரட்டை ஆணவ படுகொலைக்காக தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.கோகுல்ராஜ் வழக்குக்கு பிறகு தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் தீண்டாமை ஒழிக்கப்படவில்லை. நீதிமன்றத்தின் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்துதான் தீண்டாமையை ஒழிக்க வேண்டும். வாழ்நாள் இறுதிமூச்சு வரை அவர் சிறையிலேயே இருக்க வேண்டும் என்று வாதிட்டோம். ஆனால் சாதிய ஆணவத்தால் அந்த நபர் சமூகத்தில் வாழவே தகுதியற்றவர் என்ற அடிப்படையில் நீதிபதி தூக்கு தண்டனை வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு சமூக நீதிக்கான களமாக இருந்தாலும் இங்கு சாதிக்கு எதிரான வலுவான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்." என்றார். வர்ஷினி பிரியாவின் அம்மா அமுதா செய்தியாளர்களிடம் கூறுகையில், "தீர்ப்பு வந்ததில் மகிழ்ச்சி. நாங்கள் எதிர்பார்த்த நீதி வழங்கப்பட்டுள்ளது. என் மகளுக்கு நடந்ததை போல இனி யாருக்கும் நடக்க கூடாது." என்றார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications