Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேட்டுப்பாளையத்தில் ஒரே ஆச்சரியம்.. அதென்ன பாடையிலே கருப்பா? தோட்டத்தில் தொப்பென விழுந்த ஈகிள்

Subscribe to Oneindia Tamil

கோவை: மேட்டுப்பாளையத்தில் நடந்த சம்பவம், சுற்றுவட்டார பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவருகிறது. இதுகுறித்த வீடியோக்கள், போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கிராமங்களில் மழை பெய்யவில்லை என்றால் கழுதைகளுக்கு திருமணம் செய்து மழை வேண்டி பிரார்த்தனை செய்வது பழங்காலத்தொட்டே வழக்கம்.. குறிப்பாக, வறட்சி ஏற்படும் காலங்களில், மழை பெய்ய வேண்டி அவரவர் நம்பிக்கைகளுக்கு உட்பட்ட மழை தெய்வங்களை வணங்கும் நடைமுறை என்பது, உலகமெங்கிலும் இருக்கத்தான் செய்கிறது.

Mettupalayam Incident and Why did the villagers perform funeral rites of the eagle

விநோதங்கள்: மழை வேண்டி கழுதைகள் ஆரம்பித்து, பிறகு, தவளைகள், காக்கைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் தொடர்ந்து வருகிறது.. இந்த நடைமுறைகள் சற்று மாற்றம் கண்டுவருகின்றன.. கர்நாடகா விஜயபுரா மாவட்டத்தில் உள்ள காளகேரி கிராமத்தில், விநோதமான சடங்கு செய்கிறார்கள்.

இங்கு மயானத்திற்கு சென்று, புதைக்கப்பட்ட உடல்களின் தலைப்பகுதியை நோக்கி குழி தோண்டி, குழாய் மூலமாக தண்ணீர் விடுகிறார்கள்.. அதாவது, தாகத்தில் இருக்கின்ற இறந்த ஆத்மாக்களுக்கு தண்ணீர் வழங்கினால், மழை பெய்யுமாம்.. இதைவிட, மத்திய பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஒரு விசித்திர சம்பவம் நடந்தது. கழுதைகளுக்கு கல்யாணம் செய்யாமல், குலாப் ஜாமூன் ஊட்டிவிட்டால் மழை வரும் என்று, அந்த ஊர் பெரியவர் சொன்னாராம்.

கிராம மக்கள்: அந்த தாத்தா சொன்னபடியே, மண்ட்ஸர் மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள், அந்த ஊரிலுள்ள கழுதைகளை எல்லாம் பிடித்து கொண்டுவந்து, குலாப் ஜாமூனை ஒரு தட்டில் வைத்து, கழுதைக்கு ஊட்டி விட்டிருக்கிறார்கள்.. என்ன ஆச்சரியம்??? அந்த கழுதை, குலாப் ஜாமூன் சாப்பிட்ட அடுத்த 2வது நாளே மழை கொட்டி தீர்த்துவிட்டதாம்.

இதோ, நம்ம மேட்டுப்பாளையத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்டது திம்மராயன்பாளையம், இலுப்பம்பாளையம், வச்சினாம்பாளையம், கிச்சகத்தியூர், மூலத்துறை, பழத்தோட்டம், லிங்காபுரம் போன்ற கிராமங்கள்.. இதுபோல, சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்..

விவசாய தோட்டம்: எப்போதுமே இவர்களுக்கு போதிய மழை பெய்யாவிட்டால், விவசாயம் தழைக்க வேண்டி சுற்றுவட்டார கிராம மக்கள் ஒன்றுதிரண்டு, கூட்டு வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில் சிறுமுகை திம்மராயன்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மாரியம்மா என்பவரின் தோட்டத்தில், ஒரு கழுகு இறந்துவிட்டதாம்.. அதுவும் கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த கழுகு இறந்துவிட்டதாம்..

விவசாய தோட்டத்தில், கழுகு இறந்து கிடப்பது சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 கிராமங்களுக்கும் நல்லதில்லை, ஏதோ அபசகுணம் என்று பொது மக்கள் பயந்துபோய்விட்டார்கள். ஏற்கனவே மழை இல்லாமல் அவதிப்படும்போது, விவசாய நிலத்தில் வந்து கழுகு செத்து கிடக்குதே என்று அஞ்சினார்கள்.

உடனே இதற்கு ஒரு பரிகாரத்தை செய்தால் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்தனர்.. அதன்படி, கழுகுக்கு ஈமச்சடங்கு நடத்தினால், பரிகாரம் நிவர்த்தியாகும் என்று கருதி, இறந்த கழுகுக்கு பூஜைகள் ஆரம்பமாகின..

ஈமச்சடங்கு: இந்த கழுகுக்காகவே, ஒரு பாடை தயாரானது.. அந்த பாடையில் இறந்துபோன கழுகின் உடலை வைத்தார்கள்.. பிறகு, பாடையை, தோளில் சுமந்து ஊர்வலமாக பவானி ஆற்றங்கரைக்கு கொண்டு சென்றனர்.. அங்கே ஒரு பொது இடத்தில் பாடை வைக்கப்பட்டு, சாஸ்திரங்கள், சம்பிரதாயபடி கழுகை எரியூட்டி வழிபட்டனர்... பிறகு கழுகின் அஸ்தியை கொண்டுபோய், பவானி ஆற்றில் கரைத்துவிட்டு வந்தனர்.

விளைநிலத்தில் இப்படி கழுகு இறந்து கிடந்தால் அதை சுற்றியுள்ள 18 கிராமங்களில் மழை பொழியாது என்று சொல்வார்கள்.. இப்படித்தான், 20 வருடங்களுக்கு முன்ப, விளைநிலத்தில் இறந்து கிடந்த கழுகுக்கு ஈமச்சடங்கு இதே கிராமத்தினர் நடத்தியிருக்கிறார்கள்..

பரிகாரம்: அதற்கு பிறகுதான், சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து விவசாயம் செழித்ததாம்.. இப்போது, கிருஷ்ண ஜெயந்தி நாளில் கழுகு இறந்துவிடவும், மீண்டும் தாங்கள் பயந்துவிட்டதாகவும், அதனாலேயே ஈமச்சடங்கு நடத்தியதாகவும் சொல்கிறார்கள் இந்த கிராம மக்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+