''தாக்குதல் நடத்துனது யாரு, ஏபிவிபியா''? தமிழ்நாடு மாணவர்களிடம் வீடியோ காலில் நலம் விசாரித்த உதயநிதி!
டெல்லி ஜே.என்.யூ.வில் பயிலும் தமிழ்நாடு மாணவர்களிடம் வீடியோ காலில் பேசிய உதயநிதி
கோவை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாடு மாணவர்களிடம் வீடியோ கால் மூலம் நலம் விசாரித்து தைரியம் அளித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தாக்கியது யார், எத்தனை பேருக்கு காயம் என்பன உள்ளிட்ட கேள்விகளை அவர் இந்த உரையாடலின் போது முன் வைத்தார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

நீதி கோரி போராட்டம்
மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தலித் மாணவர் தர்ஷன் சொலான்கிக்கு நீதி கேட்டு இடதுசாரி மாணவர் அமைப்பினர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று ஊர்வலம் நடத்தினர். ஐஐடி வளாகங்களில் விளிம்பு நிலை சமுதாயங்களை சேர்ந்த மாணவர்கள் மர்மமான முறையிலும், தற்கொலை செய்தும் உயிரிழந்து வரும் நிலையில் இதன் பின்னணியில் சாதி, மத ஒடுக்குமுறை இருப்பதாக கூறி மாணவர்கள் நீதி கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதயநிதி ஆறுதல்
பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் படங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் அங்கு பயின்ற தமிழ் மாணவர்களும் பங்கேற்றனர். அப்போது ஏபிவிபி மாணவர் அமைப்புக்கும் இடதுசாரி மாணவர் அமைப்புக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. அதில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் ஜவஹர்லால் நேரு பல்கைக்கழகத்தை சேர்ந்த தமிழ்நாடு மாணவர்களிடம் வீடியோ காலில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

தாக்குதல் நடத்தியது யார்?
மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ''தலையில் அடிபட்டிருக்கிறதா, ஹாஸ்பிடலில் இருக்கிறீர்களா, எத்தனை பேருக்கு அடிபட்டிருக்கிறது. தாக்குதல் நடத்துனது யாரு, ஏபிவிபியா, சரி தலைவர் இது தொடர்பாக பார்த்துக்கொள்வார்'' எனக் கூறி தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கு தைரியமும் ஆறுதலும் தெரிவித்தார். கோவையிலிருந்து ஈரோடு வரை காரில் பயணித்த போது அவர் இந்த வீடியோ காலில் பேசினார்.

வலுக்கும் எதிர்ப்புகள்
இதனிடையே டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வன்மையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications