Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை அவினாசி ரோட்டில் அரச மரத்திற்கு அடியில் அதிசய கிணறு.. வேரோடு பிடுங்கிய போது நடந்த ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அவினாசி சாலை மேம்பால கட்டுமான பணியின் போது 65 ஆண்டு பழமையான அரச மரத்தை மறுநடவு செய்ய வேரோடு பிடுங்கிய போது அதிசயமான பழமையான கிணறு ஒன்று காணப்பட்டது. அந்த கிணற்றில் தண்ணீரும் இருந்தது. இதை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

சென்னையில் அண்ணா சாலை என்றால், கோவையில் அவினாசி ரோடு தான் பிரதான சாலை, கோவையின் மையப்பகுதியில் செல்லும் இந்த சாலையில் எப்போதுமே கடுமையான வாகன நெரிசல் இருக்கும். இது ஒருபுறம் எனில் ஏராளமான சிக்னல்கள் இருப்பதால் உக்கடத்தில் இருந்து கருமத்தம்பட்டி செல்வதற்கே பீக் அவர்ஸில் நீண்ட நேரம் ஆகும்.

Miraculous well discovered under royal tree during flyover work on Coimbatore Avinashi road

இந்த சூழலில் வாகன நெரிசலை குறைக்க கோவை அவினாசி ரோட்டில் உப்பிலி பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த மேம்பாலத்தில் லட்சுமி மில் சிக்னல், பீளமேடு சித்ரா உள்ளிட்ட 4 இடங்களில் ஏறு தளம், இறங்கு தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

மேம்பாலம் கட்டுவதற்கு மரங்கள் எங்குமே வெட்டப்படவில்லை. ஆனால் ஆனால் இறங்குதளம் மற்றும் ஏறுதளம் அமைக்க சாலையோரங்களில் உள்ள மரங்கள் இடையூறாக இருந்தன. இதையடுத்து அந்த மரங்களை வெட்டுவதுடன், வேறுடன் பிடுங்கி வ.உ.சி. மைதானத்தில் மறு நடவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டனர்.

இதன்படி முதற்கட்டமாக அவினாசி ரோட்டில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கட்டிடம் முன் இறங்கு தளம் அமைக்க இடையூறாக காணப்பட்ட 65 ஆண்டுகள் பழமையான அரச மரம் மற்றும் 25 ஆண்டுகள் பழமையான சேவல் கொண்டை பூ மரம் ஆகிய 2 மரங்களை வேருடன் பிடுங்கி மறு நடவு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்த பணியை கிரீன்கேர் அமைப்புடன் இணைந்து நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டார்கள்.

இதில் அரச மரத்தை வெட்டி அகற்றும் போது அந்த மரத்திற்கு அடியில் பழமையான கிணறு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 65 ஆண்டுகள் பழமையான அரச மரம் 12 அடி சுற்றளவில் இருந்துள்ளது. இந்த மரத்தை வெட்டி வேருடன் பிடுங்கிய போது இந்த மரத்திற்கு அடியில் 40 அடி ஆழ கிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிணற்றின் குறுக்கே 2 ராட்சத இரும்பு கம்பிகள் இருந்தது.. கிணற்றின் ஓரம் வளர்ந்த அரசமரம், இப்போது கிணற்றையே மூடிவிட்டது தெரிந்தது. கிணற்றில் தற்போதும் தண்ணீர் உள்ளது. இந்த கிணற்றை ஆச்சரியத்துடன் பலரும் பார்த்து செல்கிறார்கள்.

இதனிடையே அவினாசி சாலையில் வேருடன் பிடுங்கப்பட்ட அரச மரம் மற்றும் சேவல் கொண்டை பூ மரம் ஆகியவற்றை கோவை வ.உ.சி மைதானத்தில் மறு நடவு செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளை கிரீன்கேர் அமைப்பினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+