கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் விபூதியை பூச மறுத்து இழிவுப்படுத்தி விட்டார்.. பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. கருணாஸ்

Google Oneindia Tamil News

கோவை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் . அப்போது விபூதியை பூச மறுத்து ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமூகத்தையும் இழிவுப்படுத்தி விட்டார் என கருணாஸ் கண்டம் தெரிவித்துள்ளார். உடனடியாக ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அக்டோபர் 30ம்தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு பூஜை செய்து வழங்கப்பட்ட திருநீரை பூசாமல் கீழே போட்டார். இதனால் முக ஸ்டாலினுக்கு எதிராக ட்விட்டரில் அன்று பெரிய அளவில் ஹேஷ்டேக்குகள் வைரல் ஆனது.

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலர் குரல் எழுப்பினர். இந்நிலையில் கருணாசும், ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

1 தரம்.. 2 தரம்.. 3 தரம் -ஆட்டுக் கிடாவை ஏலம் விட்ட ஸ்டாலின்.. ரூ.5 லட்சத்திற்கு ஏலம் எடுத்த MLA..! 1 தரம்.. 2 தரம்.. 3 தரம் -ஆட்டுக் கிடாவை ஏலம் விட்ட ஸ்டாலின்.. ரூ.5 லட்சத்திற்கு ஏலம் எடுத்த MLA..!

முத்துராமலிங்க தேவர்

முத்துராமலிங்க தேவர்

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஓட்டலில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது கூறுகையில். .. திமுக கட்சியின் தாய் கழகமான திராவிட கட்சியின் தலைவரான பெரியாரால் போற்றப்பட்டவர் முத்துராமலிங்க தேவர். நாத்திகவாதியான பெரியார் 1968ல் குன்றக்குடி அடிகளார் திருநீறு பூசுகையில், அதை ஏற்றுக்கொண்டதுடன், மரியாதையாக செலுத்தப்பட்டதை அவமதிப்பது நாகரீகமாக இருக்காது, மனித பண்பாக இருக்காது என ஆணித்தரமாக சொன்னதாக சுட்டிக்காட்டியவர்.

திருநீரை உதாசீனப்படுத்தியது

திருநீரை உதாசீனப்படுத்தியது

அப்படிப்பட்ட கழகத்தில் இருந்து வந்த திமுக கட்சியின் தலைவரான முக ஸ்டாலின் ஒன்று நாத்தீகராக அல்லது ஆத்தீகராக இருக்க வேண்டும். இஸ்லாமியர்கள் அணிவிக்கும் புனிதமான குல்லாவை ஏற்கும் நிலையில், திருநீறை உதாசீனப்படுத்தியது முத்துராமலிங்க தேவரை இழிவுப்படுத்தி விட்டார். இதற்கு ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் முக்குலத்தோர் சார்பில் தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தப்பட வேண்டும்.

புரிந்து கொள்ளுங்கள்

புரிந்து கொள்ளுங்கள்

ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு சடங்கு உள்ளதை ஏற்றுக்கொள்பவராக இருக்க வேண்டும். பெருத்த சமூகத்தின் உணர்வுகளை திமுக தலைவர் முக ஸ்டாலின் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.

அரணாக இருப்பேன்

அரணாக இருப்பேன்

சசிகலா குறித்த கேள்விக்கு. சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த உடன் அரணாக இருப்போம், வந்தால் சந்திப்பேன். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைப்பதோடு நாடாளுமன்றத்தில் மருத பாண்டியர் சிலையை வைக்க வேண்டும். 68 சமூகங்களை சேர்ந்த சீர்மரபினர் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். சட்டசபை தேர்தலில் தேர்தல் நேரத்தில் கூடுதல் இடங்கள் கேட்கப்படும் என்றார்.

English summary
mla karunas ask apology from dmk leader mk stalin after he throw holy ash in thevar memorial at pasumpon, ramanathapuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X