Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி வர்ற நேரமாக பார்த்து பரபரப்பு கிளப்பிய அம்மன் அர்ஜுனன்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

கோவை: பாஜகவிலிருந்து 2 எம்எல்ஏக்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுகவில் இணைகிறார்கள் என அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் பரபரப்பை கிளப்பிய நிலையில் திருப்பூரில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி சென்றுவிட்ட போதிலும் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லையே!


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது கட்சித் தாவல்களும் நடந்து வருகின்றன. இன்று இந்த கட்சியில் இருப்போர் நாளை அந்த கட்சியில் இருப்பார்கள். அடுத்த நாள் அவர் வேறு ஒரு கட்சியில் இருப்பார்... இதுதான் அரசியல்.

 MLA Amman Arjunan says that 2 BJP MLAs will join in AIADMK

பொதுவாக ஒவ்வொரு கட்சியிலும் செல்வாக்கு இருந்தும் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை பாஜக பதவி ஆசை காட்டி தங்கள் கட்சியில் இணைத்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டை பாஜக மீது பிற கட்சிகள் முன் வைக்கின்றன. அந்த வகையில் அண்மையில் தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து விஜயதாரணி விலகி போய் பாஜகவில் இணைந்தார்.

இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையோ இனி அடுத்தடுத்து முக்கியமான நபர்கள் பாஜகவில் இணைவார்கள் என கொளுத்தி போட்டதாக தெரிகிறது. மேலும் நேற்று மாலை 5 மணிக்கு மற்ற கட்சியிலிருக்கும் முக்கிய நபர்கள் கோவையில் உள்ள நிகழ்ச்சியின் மூலம் பாஜகவில் இணைவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணைப்பு விழாவுக்காக அவினாசி சாலையில் ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது. அங்கு செய்தியாளர்கள் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நேரம் பார்த்து கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் அவ்வழியாக தனது ஆதரவாளர்களுடன் சென்றார். இதை பார்த்த செய்தியாளர்கள் அம்மன் அர்ஜுனன் பாஜகவில் இணைய போகிறார் என கருதிவிட்டனர்.

இதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட பாஜக நிர்வாகிகளும் இப்போ மணி ஒன்றரைதான் ஆகுது சரியா 4.30 மணிக்கு அதிமுகவிலிருந்து சில எம்எல்ஏக்கள் வந்து இணைகிறார்கள். கொஞ்சம் பொறுத்திருங்கள் என கூறியதால் ஹைஃப் எகிறியது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளரான அம்மன் அர்ஜுனன் பாஜக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தருகே சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

நான் சொல்லும் ஒரு செய்தியை போடுங்கள். பாஜகவில் இருந்து 2 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைய போகிறார்கள். அவினாசி சாலை என்பது எல்லோருக்குமே பொதுவான சாலைதானே.

நான் அவினாசி சாலை வழியாக போன போது அங்கு மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா நடப்பது எனக்கு எப்படி தெரியும். ஏன் அந்த பக்கம் நான் போக கூடாதா. அந்த நிகழ்வு நடந்த இடத்திற்கு எதிர்த்த வீட்டில் இருப்பவர் எனக்கு நண்பர். அவருடைய வீட்டிலிருந்துதான் வந்தேன். செய்தியாளர்கள் எல்லாம் பார்த்தீர்களே!

எங்கள் மடியில் கனமில்லை, நாங்கள் பயப்படத் தேவையில்லை. புள்ளை பிடிக்க அலையுறீங்க, எந்த புள்ளையும் கிடைக்கலை, அதனால் இணைப்பு விழாவை ரத்து செய்துவிட்டீங்கள். மீண்டும் சொல்கிறேன் பாஜக எம்எல்ஏக்கள் இருவர் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய போகிறார்கள்.

இதை நான் சிரிப்புக்காக சொல்லவில்லை. அவர்கள் கொங்கு மண்டலத்திலிருந்தும் இருக்கலாம் தென் மாவட்டத்திலிருந்தும் இருக்கலாம். இந்தியாவில் எந்த கட்சியும் தனித்து நின்று வென்றதாக சரித்திரம் இல்லை. ஆனால் 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 37 எம்பி தொகுதிகளில் வென்றது. அப்படிப்பட்ட மாபெரும் கட்சியுடன் நீங்கள் (பாஜக) கூட்டணி வைத்து 4 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டு எங்களுக்கு தண்டனை கொடுக்கறீங்களா?

இங்கு நான் ராஜாவாகத்தானே இருக்கிறேன். எதற்காக பாஜகவில் நான் சேர்ந்து கூஜாவாக இருக்கணும்? எடப்பாடி பழனிசாமி எங்களை நல்லபடியாக வைத்திருக்கிறார். சும்மா பேசக் கூடாது, 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு சீட்டிலாவது வென்று காட்டட்டும். 2021 இல் எங்கள் உழைப்பில்தான் அவர்களுக்கு 4 எம்எல்ஏக்கள் கிடைத்தனர்.

எந்த சலசலப்புக்கும் அதிமுக அஞ்சாது. சேலம் நெடுஞ்சாலையில் உள்ள எடப்பாடியார் வீட்டில் இரு பாஜக எம்எல்ஏக்களும் அதிமுகவில் இணைகிறார்கள். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை உருவாக்கினார்கள். அது மாதிரி இங்க யாரையாவது உருவாக்க திட்டமிட்டால் அது நடக்காது.

எங்கள் கட்சியை ஆரம்பித்த 50 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளோம். அப்படிப்பட்ட கட்சியை விட்டுவிட்டு நான் ஏன் பாஜகவுக்கு போக போகிறேன் என கேள்வி எழுப்பினார் அம்மன் அர்ஜுனன்.

பிரதமர் நரேந்திர மோடி என் மண் என் மக்கள் நிறைவு விழாவுக்காக பல்லடம் வந்திருந்தார். அந்த சமயத்தில் இரு பாஜக எம்எல்ஏக்கள் இணைப்பு என அம்மன் அர்ஜுனன பரபரப்பு கிளப்பியிருந்தார். ஆனால் மோடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மதுரை சென்ற போதிலும் இதுவரை அம்மன் அர்ஜுனன் சொன்னது போல் யாருமே வரவில்லையே!! ஒரு வேளை அதிமுகவினர் இணைகிறார்கள் என நேற்று பாஜகவினர் சொன்னதற்கு பழிக்கு பழியா என தெரியவில்லை. எதற்காக அந்த 2.15 மணி நேரத்தை அவர் குறிப்பிட்டிருந்தார் என்றும் தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+