Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடிக்கு டெல்லி பயம்.. டெல்லிக்கு அமெரிக்கா பயம்.. கனிமொழி செம டைமிங்

Subscribe to Oneindia Tamil

கோவை: எடப்பாடி பழனிசாமி டெல்லியை பார்த்து பயப்படுகிறார். டெல்லி அமெரிக்காவைப் பார்த்து பயப்படுகிறது. இவர்கள் யாருக்கும் பயப்படாதவர்கள் எல்லாம் அல்ல. தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடியவர்கள் எல்லாம் ஒரே அணியில் திரண்டு நமக்கு எதிராக நின்று கொண்டிருக்கிறார்கள் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி கோவை சூலூர், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், "இந்த நாட்டைப் பிரிக்க நினைப்பவர்களை எதிர்க்கக் கூடிய ஒரு கூட்டணியாக நம் கூட்டணி உள்ளது. இந்த நாட்டு மக்களை ஒருமைப்படுத்த கூடிய கூட்டணியாக சிறுபான்மை மக்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் அத்தனை பேரும் உரிமைகளுக்காகவும் பாடுபடக்கூடிய இந்தக் கூட்டணி தொடர்ந்து பங்காற்றிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் தமிழ்நாட்டிற்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குமான தேர்தல்.

mp-kanimozhi-kanimozhi-slams-edappadi-palaniswami-and-opposition-alliance

நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற நம்பிக்கையை அனைத்து மக்கள் மனதிலும் உதிக்கக்கூடிய தேர்தல் வெற்றியாக இந்த தேர்தல் அமைய வேண்டும், வட மாநிலங்களில் பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. அங்குள்ள மக்களின் நிம்மதியை அமைதியை கெடுத்து பிரச்சனைகளையும், கலவரங்களையும் உருவாக்கக்கூடிய சூழல்களை உருவாக்குகிறார்கள்.

டெல்லி பயம்

தமிழ்நாட்டின் நாம் அமைதி பூங்காவாக வைத்துக் கொண்டிருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி டெல்லியை பார்த்து பயப்படுகிறார். டெல்லி அமெரிக்காவைப் பார்த்து பயப்படுகிறது. இவர்கள் யாருக்கும் பயப்படாதவர்கள் எல்லாம் அல்ல. தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடியவர்கள் எல்லாம் ஒரே அணியில் திரண்டு நமக்கு எதிராக நின்று கொண்டிருக்கிறார்கள். நம்முடைய பிள்ளைகளின் பள்ளி நிதியை அவர்கள் கொடுப்பதில்லை.

கோவைக்கு மெட்ரோ திட்டத்தையும் கொடுப்பதில்லை. அவர்கள் வாக்கு கேட்டு வரும்போ கேஸ் எப்போது வரும் கல்வி, நிதி எப்போது வரும் மெட்ரோ எப்போது வரும், 100 நாள் வேலைக்கு என்ன வழி என்று கேள்வி கேளுங்கள். தொடர்ந்து இந்தி மொழியை திணித்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த தொகுதியில் குறுந்தொழில் கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.

இல்லத்தரசிகளுக்கான அங்கீகாரம்

மகளிர் உரிமைத் தொகை என்பது வெறும் உதவித்தொகை மட்டுமல்ல. இல்லத்தரசிகளின் உழைப்பிற்குத் தரப்பட்ட ஆகச்சிறந்த அங்கீகாரம். பாஜக ஆட்சிக்கு வந்தபோது இருந்த சிலிண்டர் விலை இன்று விண்ணைத் தொட்டுள்ளதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விலைவாசி உயர்வாலும், ஜிஎஸ்டி வரியாலும் மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டிய தருணம் இது.

வஞ்சிக்கும் மத்திய அரசு

இயற்கை பேரிடர் காலங்களில் தமிழகத்தைப் புறக்கணிப்பதையும், மாநிலத்திற்கு வரவேண்டிய நிதிப் பங்கீட்டைச் சரியாக வழங்காமல் வஞ்சிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது ஒன்றிய அரசு. நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவுகள் சிதைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நீட் விலக்கிற்காக திமுக தொடர்ந்து சமரசமின்றிப் போராடுவோம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+