கோவையில் மீண்டும் ஒரு மோசடி.. எம்எல்எம் மோசடிகள் கொங்கு மண்டலத்தை குறி வைப்பது ஏன்? ரியல் காரணம்
கோவை: கோயம்புத்தூரில் மீண்டும் ஒரு எம்எல்எம் மோசடி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல ஆயிரம் பேர் இதில் ஏமாற்றப்பட்டு இருக்கலாம் என்று புகார்கள் வைக்கப்படுகின்றன.
நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக 'My V3 ads' நிறுவனம் மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது. யூடியுபில் விளம்பரம் பார்த்தால் லாபம் கிடைக்கும் என்றுதான் மோசடி செய்துள்ளனர். இது 12 லெவல் உள்ள நூதன MLM மோசடி ஆகும். அதாவது உங்களிடம் இந்த நிறுவனத்தின் தலைவர் முதலில் யூடியுபில் விளம்பரம் பார்க்க சொல்வார். நீங்கள் இதில் இணைய ஒரு கட்டணம். அதன்பின் நீங்கள் ஒருவரை சேர்த்து விட வேண்டும். அவர் ஒருவரை சேர்க்க வேண்டும்.

எப்படி மோசடி?: இப்படியே உங்களுக்கு கீழ் 12 பேர் சேர்க்கப்பட வேண்டும். நீங்கள் இவர்களை சேர்க்க சேர்க்க கமிஷன். அடுக்கடுக்காக கமிஷன் வழங்கப்படும். இதில்தான் பலர் கட்டணம் கொடுத்து சேர்ந்துள்ளனர். இந்த நவீன எம்எல்எம் மோசடியில் பலர் சேர்ந்துள்ளனர். இப்படி 12 பேரை சேர்த்தால் உங்களுக்கு ஒரு பணம் கொடுக்கப்படும்.
அந்த 12 பேரும் அவர்களுக்கு கீழே 12 பேரை சேர்த்தால்.. நீங்கள் சில்வர் மெம்பர். அந்த 12 பேரும் இன்னும் 12 பேரை சேர்த்தால் நீங்கள் கோல்டு மெம்பர். இதேபோல் மேலும் இரண்டு அடுக்கில் 12 பேர் சேர்க்கப்பட்டால் நீங்கள் பிளாட்டினம் நம்பர். இதில் முறைகேடு நடப்பதாக ஒருவர் புகார் அளித்த நிலையில், அந்த புகார் தொடர்பாக கோவை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பணம்: அதாவது பலரிடம்.. சேர்க்கை கட்டணம் வாங்கி பல கோடிகளை ஏமாற்றி உள்ளதாக, பணத்தை ரொட்டேஷன் செய்வது போல செய்து ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளனர். பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டு உள்ளது.
மக்கள் போராட்டம்: இந்த நிலையில்தான் நேற்று அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக மக்கள் போராட்டம் செய்தனர். கடைசியில் அது மக்களே இல்லை காசு கொடுத்து அழைத்துவரப்பட்ட கும்பல் என்று கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இருந்து MLM நிறுவனத்துக்கு ஆதரவாக பலர் காசு கொடுத்து கோவையில் திரட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை குறி வைக்கப்படுவது ஏன்?: பொதுவாக இது போன்ற எம்எல்எம் மோசடிகள் கொங்கு மண்டலத்தையே குறி வைக்கிறது. லில்லி புட் மோசடி, ரைஸ் புல்லிங் மோசடி, ஈமு கோழி மோசடி உள்ளிட்ட பல மோசடிகள் பொதுவாக கொங்கு மண்டலத்தையே மையப்படுத்தியே வைக்கப்படுகிறது.
இதற்கு பின் பொருளாதார ரீதியாக காரணங்கள் உள்ளன. பொதுவாக கொங்கு மண்டலத்தில் மக்களிடம் நிலவும் surplass பணம் ஒரு காரணம். அதோடு கொங்கு மண்டலத்தில் மக்கள் பலரும் பிஸ்னஸ் செய்வதை விரும்பும் மக்கள்.
இதை பயன்படுத்தியே மோசடிகள் நடக்கின்றன. யாரும் ஏமாற வேண்டும் என்று ஏமாறவில்லை. அவர்களிடம் இருக்கும் ரிஸ்க் எடுக்கும் குணமே இப்படி மோசடிகள் நடக்க காரணம். பணம் இருக்கிறது.. நாம் பிஸ்னஸ் செய்யலாம் என்று நினைக்கும் பலரும் இப்படி இது போன்ற விஷயங்களில் பணம் முதலீடு செய்கின்றனர்.
கொங்கு மண்டலத்தில் மக்களிடம் இருக்கும் பொருளாதார வசதியே எம்எல்எம் நிறுவனங்கள் கொங்கு மண்டலத்தை குறி வைக்க முக்கிய காரணமாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications