கோவை சூலூரில் சிசிடிவியில் தெரிந்த மர்ம விலங்கு.. வனத்துறை ஆய்வுக்கு பின்னர்.. பெரிய ட்விஸ்ட்
கோவை: கோவை மாவட்டம் இருகூர் முதல் சூலூர் வரை உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை உலா வருவதாக சிசிடிவி காட்சிகள் வெளியானது. இதை பார்த்த பொதுமக்கள் பீதியில் உறைந்து உள்ளனர். வனப்பகுதியே இல்லாத இங்கு எப்படி சிறுத்தை வந்தது என்ற குழப்பம் அதிகரித்தது. ஆனால் அது சிறுத்தை அல்ல என்றும் காட்டுப்பூனை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகரம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள பெரிய நகரம் ஆகும். இங்கு அருகில் உள்ள பாலக்காடு கனவாயில் தொடங்கி வடமேற்கு பகுதி வரை மேற்கு தொடர்ச்சி மலை நீண்டு செல்கிறது. மதுக்கரை முதல் தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம், மருதமலை, காரமடை, மேட்டுப்பாளையம் என கோவையை ஒட்டியே மேற்கு தொடர்ச்சி மலை நீண்டு செல்கிறது. இந்த பகுதிகள் எல்லாம் வனவிலங்குகள் நிறைந்த பகுதியாகும். அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் வருவது இயல்பாகும்.

மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட வனப் பகுதியில் எப்போதும் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இங்குள்ள பாலக்காடு கணவாய் அடர்ந்த வனப்பகுதி என்பதால், யானைகள், புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்பட பல்வேறு வனவிலங்குகள் அடிக்கடி கடந்து செல்லும். யானைகள், சிறுத்தைகள் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வருவது வழக்கம்.
ஆனால் முதல் முறையாக கோவை மாநகருக்கே அண்மையில் சிறுத்தை வந்துவிட்டதாக தகவல்கள் பரவியது. கடந்த நவம்பர் 12ம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று கோவை மாநகரின் நுழைவுப்பகுதியான 15 கி.மீ தொலைவில் உள்ள இருகூர் பகுதிக்கு வந்ததாக கூறப்பட்டது, பின்னர் நொய்யல் ஆற்றுப்பகுதிக்கு அருகில் உள்ள தனியார் மோட்டார் கம்பெனிக்குள் நுழைந்தது என்றும், பின்னர் அந்த பகுதிக்குள் உலா வந்த சிறுத்தை அங்கிருந்து வெளியே சென்றது என்றும், அப்போது இரவு பணியில் இருந்த காவலர் சிறுத்தை அங்கிருந்து ஓடி செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் என்றும் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்று தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை வைத்து சிறுத்தை இருக்கும் இடத்தை அடையாளம் காண முயன்றனர். ஆனால் சிறுத்தை தென்படவில்லை.
எனினும் கண்காணிப்பு காட்சிகள் அடிப்படையில், கோவை மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் உத்தரவின்பேரில் கோவை மற்றும் மதுக்கரை சரக வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆனால் சிறுத்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அங்கு வனத்துறையினர் கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பாப்பம்பட்டி அருகே சாய்கார்டன் பகுதியில் சிறுத்தை உலா வந்ததாக கண்காணிப்பு கேமராக்களில் சிறுத்தை நடமாடும் காட்சியும் பதிவானது. இதனால் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அங்கு வனப்பகுதி எதுவும் இல்லாத நிலையில் சிறுத்தை எப்படி வந்தது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பதிவான கால்தடம் குறித்து ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு காங்கேயம்பாளையம் பகுதியிலும் சிறுத்தை நடமாடுவதாகவும், நடுப்பாளையத்தில் ஒரு ஆட்டை சிறுத்தை கடித்ததாகவும் தகவல்கள் பரவியது. எனவே வனத்துறையினர் முகாமிட்டு கேமராக்களை பொருத்தி கண்காணித்தனர்.
இறுதியாக நடுப்பாளையம் பகுதியில் ஆட்டை கடித்தது சிறுத்தை அல்ல. அது நாய் என்றும் அங்கு பதிவான கால்தடம் குறித்தும் ஆய்வு செய்த போது நாயின் கால்தடத்தை தவிர வேறு எந்த விலங்குகளின் கால்தடமும் இல்லை என்றும் இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் வனத்துறையினர் தெரிரவித்தனர்.
மேலும் பாப்பம்பட்டி அருகே சாய்கார்டனில் நடமாடியதும் சிறுத்தை அல்ல என்றும் காட்டுப்பூனை தான் என்றும், அது வீட்டில் உள்ள பூனை போன்று சிறியதாக இருக்காது என்றும் அது முயல், கோழி உள்ளிட்டவற்றை சாப்பிடுவதால் பார்ப்பதற்கு சிறுத்தைப்போன்ற உருவத்தில் இருக்கும் என்றும் கால்தடத்தை ஆய்வு செய்ததில் காட்டுப்பூனை என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றும் வனத்துறையினர் கூறினார்கள். எனினும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications