திராவிடர் கழகம் மதிவதனி மீது ஆபாச விமர்சனம்.. நாம் தமிழர் ஆதரவாளரை தூக்கிய போலீஸ்
கோவை: திராவிடர் கழகம் இயக்கத்தின் துணை பொது செயலாளர் மதிவதனி குறித்து யூட்யூபில் ஆபாசமாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் சாரங்கபாணி என்பவரை கோவை காவல்துறையினர் கைது செய்தனர். ஒசூரில் இருந்த சாரங்கபாணியை கைது செய்து காவல்துறையினர், அவரை கோவை அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. இப்போதிருந்தே ஆன்லைனிலம், ஆஃப்லைனிலும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் அனல் பறக்க தொடங்கிவிட்டன. சமூகவலைதளங்களிலும் அரசியல் கட்சிகளின் விவாதங்கள் சூடுபிடிக்க தொங்கிவிட்டன. வருகின்ற நாட்களில் அரசியல் கட்சிகள் இடையேயான விவாதம் இன்னும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாரங்கபாணி. தமிழ் தேசிய கொள்கையை பின்பற்றி வருபவர். மேலும் சாரங்கபாணி நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். தன்னுடைய சமூகவலைதள பக்கத்திலும், யூட்யூப் சேனல்களிலும் நாம் தமிழர், தமிழ் தேசியம் கொள்கைக்கு ஆதரவாகவும், திராவிடத்துக்கு எதிராகவும் கருத்துகளை பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் சாரங்கபாணி சமீபத்தில் ஒரு யூ-ட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் திராவிடர் கழகம் இயக்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி குறித்து விமர்சித்திருந்தார். அந்தப் பேட்டியில் அவர் மிகவும் ஆபாசமாகவும் , அருவெறுக்க தக்க வகையிலும் மதிவதனி குறித்து பேட்டியளித்ததாக திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பிரபாகரன், சாரங்கபாணி மீது கோவை மாநகர காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவதூறு கருத்து பரப்பியதற்காக சாரங்கபாணி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் இருந்தபோது, சாரங்கபாணி ஒசூரில் இருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்வதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதையடுத்து கோவையில் இருந்து ஒசூர் சென்ற தனிப்படையினர் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரான சாரங்கபாணியை கைது செய்தனர். அவரை கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications