யார் இந்த நிர்வாண திருடன்.. வியக்க வைக்கும் மறுபக்கம்.. "பலே பாண்டியா".. பகீரை கிளப்பிய வாக்குமூலம்

ஷோரூம்களில் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

கோவை: நிர்வாணமாகவே கடைகளுக்குள் திருடுவேன் என்றும் திருடி முடித்தபிறகு அந்த கடைக்கு கற்பூரம் சுற்றி வழிபடுவேன் என்றும் கொள்ளையடித்த நபர் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பைக், கார் ஷோரூமில் கடந்த சில மாதங்களாகவே ஏராளமான திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன.. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிங்காநல்லூர் போலீசில் புகார் தந்தனர்.

குறிப்பாக, சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வாகன ஷோரூமில் ரூ.12 லட்சம் திருட்டு போனதாகவும் புகார் வந்தது... அந்தவகையில், போலீசாரும் சம்பந்தப்பட்ட ஷோரூமில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், நிர்வாண நிலையில் ஒருவர் அத்தனை கொள்ளையிலும் ஈடுபட்டது தெரியவந்தது.

பாண்டியன்

பாண்டியன்

இது தொடர்பாக போலீசார், அந்த நபர் யார் என்ற விசாரணையில் ஈடுபட்டனர்.. அப்போதுதான், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அவரின் பெயர் பாண்டியன் என்பதும் 42 வயதாகிறது என்பதும் தெரியவந்தது.. இதையடுத்து, அவரை பழனியில் பதுங்கியிருந்தபோது சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.. அப்போது பாண்டியன் அளித்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ந்து விட்டனர்.

 வாக்குமூலம்

வாக்குமூலம்

பாண்டியன் சொன்னதாவது: "கோவையில் உள்ள 3 வாகன ஷோரூம்களில் திருடி உள்ளேன்.. 3 இடங்களிலும் நிர்வாண நிலையிலே புகுந்து திருடினேன்.. இதைதவிர, சென்னை, மதுரை உள்ளிட்ட 14 இடங்களிலும் திருடியுள்ளேன்.. ஆனால் எல்லாமே வாகன ஷோரூம்களை குறிவைத்து திருடுவேன்... ஏனென்றால், இப்படிப்பட்ட ஷோரூம்களில்தான் ரொக்கப்பணத்தை மொத்தமாக வைத்திருப்பார்கள்..

 ஜன்னல் கம்பி

ஜன்னல் கம்பி

எந்த ஷோரூமில் திருடுவது என்பதை அன்று பகலிலேயே முடிவு செய்து தேர்ந்தெடுத்து வைத்து கொள்வேன்.. ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே செல்வேன்.. அப்போது அந்த ஜன்னல் கம்பியில் என்னுடைய சட்டை, பேண்ட் கம்பியில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவே, எல்லா டிரஸ்ஸையும் கழற்றி வைத்துவிட்டு ஷோரூம்களில் நிர்வாணமாகவே நுழைவேன்.. டிரஸ் இல்லாமல் திருடினால் யாரிடமும் பிடிபடமாட்டேன் என்று நம்பினேன்..

நிர்வாணம்

நிர்வாணம்

திருடி முடித்துவிட்டு, ஷோரூமில் இருந்து வெளியே வந்ததுமே அந்த கடைக்கு ஒரு நன்றிசொல்லி கற்பூரம் ஏற்றி வழிபடுவேன்.. இப்படி திருடிய பணத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட என்னுடைய சொந்தக்காரர்களின் சிகிச்சைக்கு பணம் தந்தேன்.. இன்னும் இதுபோன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வறுமை நிலையில் இருந்தவர்களுக்கும் பண உதவி செய்தேன்.. எனக்கு காது சரியாக கேட்காது.. அதனால் காதுகேட்கும் மிஷின் ஒன்று வாங்கி கொண்டேன்" என்றார்..

கைது

கைது

இதையடுத்து, பாண்டியன் பழனியில் தங்கியிருந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்... ஆனால் ஒரே இடத்தில் பணத்தை வைக்காமல், வீட்டிற்குள்ளேயே பிரித்து பிரித்து ஆங்காங்கே பணத்தை வைத்திருந்துள்ளார்.. இப்போது பாண்டியனை போலீசார் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

கைவரிசை

கைவரிசை

ஆரம்பத்தில் பாண்டியன் உண்டியல் திருடனாக மட்டுமே இருந்துள்ளார்.. அதற்கு பிறகுதான் கல்யாணத்தில் சமையல் மாஸ்டர் வேலை பார்த்து வந்திருக்கிறார்.. ஏற்கனவே திருட்டு வழக்கில் சிறை சென்றவரும்கூட.. அது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நடந்து வந்துள்ளது.. பல இடங்களில் கைவரிசையை காட்டி கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் வரை கொள்ளையடித்துள்ளார்...

 தான - தர்மம்

தான - தர்மம்

ஆனால், சென்னையில் ரோட்டோரம் வசிப்பவர்கள் காசு கேட்டால் தந்துவிடுவாராம்.. சாப்பாடு இல்லை என்றாலும், உடனே சாப்பாடு வாங்கி தந்துவிடுவார்.. இப்படி 2 நாள், 3 நாள் என தொடர்ந்து சாலையோரம் வசிப்பவர்களுக்கு சாப்பாடு வாங்கி தந்திருக்கிறார்.. அதாவது கொள்ளையடித்த பணத்தில் பெருமளவு தானம், தர்மத்தையே செய்து வந்துள்ளார் பாண்டியன்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+