செம ஆக்ரோஷத்தில் அந்த ஒற்றை யானை.. விரட்ட முடியாமல் தவிக்கும் மக்கள்.. வருகிறது கும்கி
ஒற்றை யானையால் பொதுமக்கள் பீதியில் உறைந்து உள்ளனர்.
Recommended Video

கோவை: செம ஆக்ரோஷத்தில் இருக்கிறது அந்த ஒற்றை யானை.. அதை விரட்டதான் மக்கள் படாத பாடு பட்டு வருகிறார்கள்.
கோவை மாவட்டம் மற்றும் வரப்பாளையம், துடியலூர், பகுதிகளில் எப்பவுமே இருக்கிற தொல்லை யானைகள் வந்துவிடுவதுன். இங்கு நிறைய விவசாய நிலங்கள் இருக்கின்றன.
அதனால் இது தெரிந்து வைத்து கொண்ட யானைகள் காட்டுக்குள்ளிருந்து நேராக கிளம்பி இங்கு வந்து டேரா போடுவதுதான். தினமும் காலையிலயே வந்துவிடுவது. வயிறு முட்ட சாப்பிட்டு கிளம்பி போய் கொண்டே இருப்பது. இப்படிதான் நடந்து வருகிறது.

காட்டுக்குள் போகவில்லை
நேற்று சாயங்காலம்கூட கோவை துடியலூர் குருடம்பாளையம் பகுதியில் ஒரு யானை வந்திருக்கிறது. ஜோடி எல்லாம் இல்லை.. ஒத்தை ஆளா வந்திருக்கு. ஆனா சாப்பிட்டு விட்டு நடையை கட்டும் என்று பார்த்தால், ஊருக்குள் வந்து விட்டது. திரும்பவும் காட்டுக்கு போகவே இல்லை. ஏன்னும் தெரியல.

ஆக்ரோஷத்தில் யானை
எப்பவுமே யானைகள் கூட்டமாக இருந்தால்தான் நமக்கு நிம்மதி. இப்படி ஒத்தையா வந்துட்டா நமக்குதான் சிக்கல். நம்ம இனம் நம்முடன் இல்லையே என்று நினைத்து யானை ஆக்ரோஷம் ஆயிடுமாம். இப்பவும் இந்த யானை ஆக்ரோஷமாக இருக்காம். அதனால மக்கள் ரொம்பவே பயந்து போய் இருக்கிறார்கள்.

தீவிர கண்காணிப்பு
உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் சொன்னார்கள். அவர்களும் விரைந்து யானையை வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்காங்க. அந்த யானைகிட்ட யாரையும் போக வேண்டாம் என்று கண்டிப்புடன் சொல்லி விட்டார்கள். பொதுமக்கள் யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்று யானையை விட்டு அங்கே இங்கே என்று வனத்துறையினர் போவதே இல்லை.

கும்கி வரப்போகுது
இதை விரட்டி ஒரே வழி.... கும்கி யானைகளை வரவழைத்து இந்த ஒற்றை யானையை விரட்டலாம் என்று ஐடியா செய்துள்ளார்கள். பார்ப்போம்... இந்த கொம்பனை விரட்டும் அந்த கும்கி யார் என்று?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications