கோவை கார் வெடிப்பு சம்பவம்.. 14வது குற்றவாளி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது என்.ஐ.ஏ!
கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கில், 14வது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட தாஹா நசீர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது என்.ஐ.ஏ.
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் அருகில் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமீஷா முபின் என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜமேஷா முபீன் வீட்டில் நடந்த சோதனையில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களின் வீடுகளில் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு அங்கிருந்த ஆவணங்களையும் கைப்பற்றி, தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் போத்தனூர் திருமலை நகர் பகுதியை சேர்ந்த இப்ராஹிம் என்பவரது மகனான தாஹா நசீரை 14வது நபராக என்.ஐ.ஏ அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் கைது செய்திருந்தனர். கோவை மாவட்டம் சௌரிபாளையம் பகுதியில் உள்ள கார் சர்வீஸ் செண்டரில் பணியாற்றி வரும் நசீரும் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனும் நண்பர்கள் என கூறப்படும் சூழலில் தாஹா நசீர் கைது செய்யப்பட்டார்.
தாஹா நசீரை சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் 14 வது நபராக தாஹா நசீர், என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தாஹா நசீரை கோவைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கோவை கார் வெடிப்பு வழக்கில், 14வது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட தாஹா நசீர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது என்.ஐ.ஏ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications