கோவை கார் சிலிண்டர் வெடிப்பு - 5 பேர் கைது- பாய்ந்தது 'ஊபா' ! என்.ஐ.ஏ. விசாரணைக்கு விரைவில் மாற்றம்?
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேர் மீது ஊபா எனப்படும் பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதனையடுத்து கோவை சம்பவம் தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.க்கு மாற்றப்படக் கூடும் என தெரிகிறது.
கோவை உக்கடம் அருகே கோவில் முன்பாக நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கார் சிலிண்டரை வெடிபொருட்கள் மூலம் வெடிக்கச் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

என்.ஐ.ஏ.விசாரித்த முபின்
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேசா முபின், 2019-ம் ஆண்டு என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டவர். இலங்கை தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் கைது செய்யப்பட்ட கோவை அசாருதீனுடன் மிக நெருக்கமாக இருந்தவர் முபின். கேரளா சிறையில் உள்ள அசாருதீனை முபின் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

பாய்ந்தது ஊபா சட்டம்
இதனைத் தொடர்ந்து முபினின் கூட்டாளிகளான முகமது தல்கா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டர். கோவையில் 1998-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரியான சிறையில் உள்ள அல் உம்மா பாட்ஷாவின் சகோதரர் நவாஸின் மகன்தான் முகமது தல்கா. இவர்கள் அனைவரும் மீதும் ஊபா எனப்படும் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

என்.ஐ.ஏ. விசாரணை?
பொதுவாக ஊபா வழக்குகளை தேசிய புலனாய்வு ஏஜென்சிதான் விசாரிக்கும். என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் அதிகார வரம்புக்குள், ஊபா வழக்குகளை விசாரிக்க முடியும். இதனால் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை என்.ஐ.ஏ.-க்கு விரைவில் மாற்றப்படக் கூடும் என கூறப்படுகிறது.

சென்னையில் என்.ஐ.ஏ. போலீஸ் ஸ்டேஷன்
தமிழகம் தொடர்புடைய இத்தகைய வழக்குகளை இதுவரை டெல்லி அல்லது ஹைதாரபாத்தில் உள்ள என்.ஐ.ஏ. போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்வர். அதன்பின்னரே விசாரணைகள் நடத்தப்படும். கடந்த 2020-ம் ஆண்டு சென்னையிலும் என்.ஐ.ஏ. போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழக அரசு இதில் ஆர்வம் காட்டவில்லை. இது தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு தரப்பில் நெருக்கடி தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்தே அண்மையில் சென்னை புரசைவாக்கத்தில் என்.ஐ.ஏ. போலீஸ் ஸ்டேஷன் திறக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இந்த சென்னை ஸ்டேஷனில் முதல் வழக்காக கோவை சம்பவம் விசாரிக்க வாய்ப்புள்ளது என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
-
கோவை சிறுமி பலாத்காரம்.. சிரித்து கொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த விஜய்? உண்மை என்ன? -
முன்னுக்குப் பின் முரண்.. ஏன் இவ்வளவு தடுமாற்றம்.. கோவை சிறுமியின் தாயிடம் அடுக்கடுக்கான கேள்வி -
கடுங்குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை.. விஜய் அதிரடி உத்தரவு! என் கவுண்டருக்கு தரப்பட்ட கிரீன் சிக்னல்? -
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு -
சூலூர் கொடூரத்தை திசைதிருப்ப.. உதயநிதியை வைத்து ஏஐ போலி படம்.. தீவிரமாக பரவும் வதந்தி.. தவெக மூவ் -
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு -
சூலூர் கொடூரம்.. 'ஹத்ராஸ்' ஆக மாறிய கோவை? உத்தர பிரதேச பாணியில் அவசரத் தகனம் செய்த காவல் துறை! -
கேடிஎம் பைக்கில் வந்த கும்பல்..காதலிக்க மறுத்த பெண் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு..கோவை ஷாக்! -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications