கோயம்புத்தூர் டீக்கடையில் யார் பாருங்க.. கெத்தாக நிகிதா.. 2 மணி நேரம் சிறைபிடித்த கோவை மக்கள்? நிஜமா

Subscribe to Oneindia Tamil

கோவை: கைது நடவடிக்கைக்கு பயந்து நிகிதா ஒவ்வொரு ஊராக சுற்றிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில் நிகிதா, கோவையில் டீக்கடை ஒன்றில் அமர்ந்திருப்பது போன்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை தெரியவில்லை.. ஆனால், நிகிதாவை அடையாளம் கண்டு, அங்கிருந்த பொதுமக்களே அவரை சிறைபிடித்து வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கூட்டி வருகின்றன.

நிகிதா மீதான புகார்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், நிகிதா பிடிபட்டால் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. நிகிதா ஏற்கனவே 3 முறை திருமணமாகி விவாகரத்தானவர், ஆனால் இன்னும் குழந்தை இல்லையாம்..

nikitha coimbatore kovai

நிகிதா எங்கே

தற்போது நிகிதா வெளியூரில் இருப்பதாக தெரிகிறது..நேற்று திடீரென நிகிதா ஒரு விளக்கத்தை தந்திருந்தார்.. " நான் தலைமறைவானதாக சொல்கிறார்கள். நான் என்னுடைய வீட்டில்தான் இருக்கேன். விசாரணைக்கு ஒத்துழைப்பும் தந்து வருகிறேன். அஜித்குமார் இறந்ததில் நானும், என்னுடைய அம்மாவும் வேதனையில் இருக்கிறோம்.

மடப்புரம் காளி கோயிலில் காரை பார்க்கிங் செய்வதற்கு முன்பு என்னுடைய அம்மாவுக்கு சக்கர நாற்காலியை எடுத்து வந்த காவலாளி அஜித்குமார் ரூ.500 கேட்டார். அப்போதுதான் எங்களுக்குள் வாக்குவாதம் வெடித்தது. பிறகு கடைசியாக ரூ.100 தான் கொடுத்தேன்.

ஸ்கேன் சென்டர்

கோயிலுக்கு போயிட்டு, அப்படியே ஸ்கேன் சென்டருக்கு போகவிருந்தோம். அதுக்குதான், தங்க நகைகளை கழட்டி காரில் பைக்குள் வைத்திருந்தோம். அந்த நகைப்பை காணாமல் போய்விட்டதால் புகார் தந்தோம். உயர் அதிகாரிகள் யாரும் எனக்கு உறவினர்களாக இல்லை. என் மீது எல்லாரும் பொய் புகார்களை சொல்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

வீட்டில்தான் இருக்கிறேன், விசாரணைக்கு அழைக்கும்போது கண்டிப்பாக செல்வேன் என்று, நிகிதா இவ்வாறு சொல்லியிருந்தாலும் அவரை காணவில்லை என்றுதான் சொல்கிறார்கள்.. கைது பயந்து ஊர் ஊராக பதுங்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள்..

இப்படிப்பட்ட சூழலில்தான், நிகிதா கோவையில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. போலீஸ் விசாரணைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.. அதற்கேற்றவாறு ஓட்டல் ஒன்றில் நிகிதா இருப்பது போன்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

டீக்கடையில் நிகிதா

கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நிகிதா, அவரது அம்மா, ஒரு காரில் டிரைவருடன் வந்துள்ளனர். பிறகு ஓட்டலில் அமர்ந்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர்.. இதைப்பார்த்து சிலர், அவர்களிடமே சென்று விசாரித்திருக்கிறார்கள்..

பிறகு அந்த டீக்கடைக்காரரே அவர்களை சிறைபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்..
அங்கிருந்தவர்களும் போலீஸ் ஸ்டேஷனுக்கும், போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கும் தகவல் சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால், தகவல் சொல்லி 2 மணி நேரமாகியும், போலீசார் யாருமே ஸ்பாட்டுக்கு போகவில்லையாம்.. இதனால் தகவல் சொன்னவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்..

சிறைபிடிக்கப்பட்ட நிகிதா

2 மணி நேரத்துக்கு மேல் நிகிதாவை சிறைபிடித்து வைத்துவிட்டு, அதற்கு மேல் முடியாமல், நிகிதாவை விடுவித்துள்ளனர்.. உடனே நிகிதா தன்னுடைய அம்மாவை அழைத்துக்கொண்டு காரில் கிளம்பி சென்றுவிட்டாராம்.

அந்த கார் கோவையை நோக்கி சென்றதாக, நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.. எனவே நிகிதா கோவையில்தான் பதுங்கியிருக்கலாம் என்று உறுதியாக சொல்கிறார்கள்..

இதனிடையே நிகிதா ஓட்டலில் உட்கார்ந்திருக்கும்போது, அவரை சிறைபிடித்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.. சிறைபிடித்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தபோது, நடந்த உரையாடலும் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+