நிகிதாவை 2 மணி நேரம் லாக் பண்ணி வச்சோம்.. கன்ட்ரோல் ரூமுல விட சொல்லிட்டாங்க.. கோவை வர்றாங்க: ஆடியோ

Subscribe to Oneindia Tamil

கோவை: ‛2 மணி நேரம் நிகிதாவை லாக் பண்ணி வச்சி இருந்தோம் சார். ஆனா கன்ட்ரோல் ரூமுல இருந்தவங்க அவரை விட சொல்லிட்டாங்க. இப்ப அவங்க கார் கோவை நோக்கி போய்கிட்டு இருக்குது சார்' என்று நிகிதாவை காருடன் சிறைபிடித்து வைத்திருந்தவர்கள், போலீசாரிடம் பேசும் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை தெரியவில்லை என்றாலும், நிகிதா தற்போது கோவையில் பதுங்கியிருக்கிறார் என்றும் மற்றொரு தகவல் வெளியாகியிருக்கிறது.

கோயில் காவலாளி அஜித் குமார் போலீஸ் கஸ்டடியில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி எடுத்து வருகிறது..

nikitha coimbatore kovai

திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா என்ற பெண்தான், அஜித் குமார் மீதான திருட்டு புகாரை தந்தவர்.. அப்போதுதான் அஜித்குமார் அடித்து துன்புறுத்தப்பட்டு இறந்தே போயிருக்கிறார்..
போலீஸ் லாக்கப்பில் மரணமடைந்த நிலையில், சம்பந்தப்பட்ட போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்..

அஜித்குமார் பாவம்

தற்போது அஜித்குமார் திருடவில்லை என்பதால் அவருக்கான ஆதரவுகள் பெருகி வருகின்றன.. அவர் மீது பொய்ப்புகார் தந்த நிகிதாவுக்கு எதிர்ப்புகள் கூடிவருகின்றன.. இந்த நேரத்தில் நிகிதாவின் மற்ற மோசடி சம்பவங்களும் வெளிவர துவங்கி உள்ளன.. 4 திருமண மோசடி நிகிதா மீது இருக்கிறதாம்.. ஏகப்பட்ட பண மோசடி வழக்கும் நிகிதா மீது இருக்கிறதாம்.

இதையெல்லாம் விசாரிக்கலாம் என்றால் நிகிதாவை காணவில்லை.. வீட்டில்தான் இருக்கிறேன், போலீசுக்கு ஒத்துழைப்பும் தந்து கொண்டிருக்கிறேன் என்று நேற்று நிகிதாவின் பேட்டி ஒன்று இணையத்தில் வெளியானது.. ஆனால், நிகிதாவை இதுவரை காணவில்லை..


ஓட்டலில் நிகிதா

இந்த நேரத்தில்தான், கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நிகிதா, அவரது அம்மா, ஒரு காரில் டிரைவருடன் வந்துள்ளனர். அங்கு அமர்ந்து 3 பேரும் சாப்பிட்டுள்ளனர்.. அங்கிருந்தவர்கள் அடையாளம் கண்டுகொண்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கும், போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கும் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

தகவல் சொல்லி 2 மணி நேரமாகியும், போலீசார் யாருமே ஸ்பாட்டுக்கு போகவில்லையாம்.. இதனால் தகவல் சொன்னவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நிகிதா ஓட்டலில் உட்கார்ந்திருக்கும் போட்டோவும் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.. அதேபோல, சிறைபிடித்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தபோது, நடந்த உரையாடலும் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.

ஆடியோவில் பேசுபவர், "சார், திருப்புவனத்தில் கொலை செய்யப்பட்டவர் மீது புகார் தந்த பெண் தலைமறைவாகிவிட்டதாக பேப்பரிலும், டிவியிலும் சொல்லியிருந்தார்கள்.. அவங்க இங்கே வந்திருந்தாங்க சார்..

கன்ட்ரோல் ரூமுக்கு போன்

உடனே 100-க்கு போன் செய்து சொன்னோம்.. அவங்க வண்டியை லாக் பண்ணிடுங்கன்னு சொன்னாங்க.. உடனே நாங்களும் அவங்க காரை லாக் செய்து வைத்திருந்தோம்..

2 மணி நேரம் நாங்கள்தான் பிடித்து வைத்திருந்தோம்.. நகையை காணோம்னு சொன்ன அந்த அக்கா, அவங்க அம்மா, அவங்களுடன் இன்னொருத்தரும் வந்திருந்தார்.. அவர் அந்தம்மாவின் மகனா, தம்பியா தெரியாது.,. இவங்க 3 பேரும் ஹோண்டாசிட்டி காரில் வந்தாங்க.. அவங்களை பார்த்ததுமே, உடனே கோவை மாவட்ட 100-க்கு போன் செய்தோம்.. கன்ட்ரோல் ரூமுக்கும் போன் செய்தோம். அவர்களை பிடித்து வைக்க சொன்னார்கள்..

நாங்களும் 2 மணி நேரம் பிடித்து நிறுத்தி வைத்திருந்தோம்.. கடைசியில் அவர்களை விட்டுவிடும்படி, கன்ட்ரோல் ரூமிலிருந்து சொன்னார்கள்.. கோவை பொள்ளாச்சி ரூட்டிலிருந்து கிளம்பி, .. கோவையை நோக்கி அவங்க கார் வந்துட்டு இருக்கு" என்று ஆடியோவில் பேசுபவர் கூறுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+