சார், தாத்தா, மாமானு கூப்பிட்டாலும்! "டேய் வாடா இங்க" என நண்பன் அழைத்தாலே மகிழ்ச்சி! ரஜினி துள்ளல்
கோவை: நான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் 6 மாதத்திற்கு ஒரு முறை எனது நண்பர்களைச் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சியாக தெரிவித்திருக்கிறார். நட்பு குறித்து சில விஷயங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 1975 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை வாழ்த்தி நடிகர் ரஜினி பேசிய வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
அதில் பேசிய நடிகர் ரஜினி, "தமிழ்நாடு வேளாண் கல்லூரியில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து நீங்கள் எல்லோரும் சந்தித்திருக்கிறீர்கள். பழைய நண்பர்களைப் பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். இந்த பல்கலைக்கழகத்தில் படித்த நிறைய பேர் பெரியாளாக மாறியிருக்கிறார்கள்.
பெரிய இடங்களில் பணியாற்றி வருகிறார்கள். தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு, டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு ஆகியோர் இங்கு படித்திருக்கிறார்கள். எனது சம்பந்தி வணங்காமுடியும் (சவுந்தர்யாவின் மாமனார்) இங்குதான் படித்தார்.
ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபு செய்துள்ள சேவை சாதாரணமானது கிடையாது. தமிழக காவல்துறை எப்போதும் அதை மறக்க முடியாது. அவரது ஃபிட்னஸ் எனக்குப் பிடிக்கும்.
முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புவின் அறிவு ஆழமானது. அவருக்குத் தெரியாத துறை இல்லை என்றே கூறலாம். அனைத்து விஷயங்களையும் விளக்கமாகப் பேசும் அவரது திறன் அசாத்தியமானது எனப் பேசப்படுகிறது. தலைமைச் செயலாளராக இருந்த காலகட்டத்தில், அவர் பல பணிகளைச் செய்துள்ளார். அவரைப் போல மென்மையான ஒரு மனிதரைக் காண்பது அரிது.
பல விதமான உறவுகள் இருந்தாலும் நண்பர்களைப் பார்க்கும் போது புத்துணர்வு இருக்கும். நண்பர்களுடன் இருப்பது மகிழ்ச்சியானதாக இருக்கும். நான் எத்தனை பிஸியாக இருந்தாலும் 6 மாதத்திற்கு ஒரு முறை எனது நண்பர்களைச் சந்திப்பேன். சிவாஜி என்ற பெயரை நான் மறந்துவிட்டாலும், அவர்கள் அந்தப் பெயரை அழைத்து கூப்பிடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
6 மாதங்களுக்கு முறையாவது நான் என் நண்பர்களை சந்தித்து பேசுவது புத்துணர்ச்சியாக இருக்கும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அது போல் நம்மை சார், தாத்தா, மாமா என எத்தனை பேர் எத்தனை விதமாக அழைத்தாலும் டேய் வாடா இங்க என உரிமையுடன் நண்பர்கள் அழைக்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கும் என ரஜினி தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்த் பெங்களூரில் ஒரு பேருந்தில் கன்டெக்டராக வேலை பார்த்து வந்தவர். அந்த பேருந்தில் ஓட்டுநராக இருந்தவர் ராவ் பகதூர். இருவரும் சேர்ந்து நிறைய நாடகங்களில் நடித்திருந்தனர். அப்போது ரஜினிக்கு காசு கொடுத்து சென்னையில் திரைப்படக் கல்லூரியில் சேருமாறு சொல்லியது ராஜ் பகதூர். அதனால் ரஜினி இன்று உலகமறிந்த சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், பெங்களூரில் தனது நண்பர்களான ராஜ் பகதூர், ஓட்டுநர்கள், நடத்துநர்களை மறந்ததே இல்லை.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications