கோவை சிறுமிகள் பாலியல் வழக்கு: ஜான்ஜெபராஜ், உறவினர் தவிர வேறு யாருக்கும் தொடர்பில்லை - கமிஷனர் தகவல்
கோவை: கோவையில் சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்த மத போதகர் ஜான் ஜெபராஜ் மற்றும் அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்றும், சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் புகார் மனு அளிப்பதற்காக வருகிறார்கள். இவர்கள் மனு கொடுப்பதற்காக காத்திருப்பதற்கு அங்கு மரத்தடியில் திறந்தவெளி பகுதியாக இருந்தது. இந்த நிலையில் அங்கு பொதுமக்கள் காத்திருக்கும் போது புத்தகங்கள், செய்தித்தாள்கள் படிப்பதற்கும், வசதியாக அமருவதற்கும் நூலகத்துடன் இருக்கைகள் வசதி தனியார் பங்களிப்புடன் கூடிய பொதுமக்கள் காத்திருப்பு வளாகம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த காத்திருப்பு வளாகத்தில் 12 இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், அந்தப் பகுதியில் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த வசதியாக வைஃபை வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக இலவசமாகப் புகார்களை அளிக்கலாம். இதை இன்று காவல் ஆணையர் சரவணன் சுந்தர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் பேசுகையில், இன்று கோவை மாநகர காவல் அலுவலகத்தில், enhanced a public waiting area செட்டுடன் கூடிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளோம். மேலும், தமிழக அரசின் திட்டமான, free Wi-Fi zone-ம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஃப்ரீ வைஃபை ஜோனை பொதுமக்கள் பயன்படுத்தி, புகார்களைக் கொடுக்கலாம்.
கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில் துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசாரணை முடிவுற்றவுடன் தகவல் கொடுக்கப்படும். மாணவி தற்கொலை சம்பவத்தைப் பொருத்தவரை, மாணவர்கள் கொடுத்த குற்றச்சாட்டு அனைத்தும் விசாரிக்கப்படும். யாரெல்லாம் புகார் கொடுத்து இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், போதகர் ஜான் ஜெபராஜ் சார்ந்த மற்றொரு நபரை கைது செய்து இருக்கிறார்கள். செக்சன் 164 இல் அந்தக் குழந்தை என்ன பதில் கொடுத்திருக்கிறதோ, அதைப் பொறுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. பென்னெட் மீது அந்த குழந்தை புகார் தெரிவித்து இருக்கிறது. அதன் பிறகு தான் அவரை கைது செய்து இருக்கிறோம். வேறு யார் மீதும் இதுவரை அந்த குழந்தை புகார் கூறவில்லை என்று கூறினார்.
வைஃபை அரசினுடைய வளர்ச்சித் திட்டம். நம்பிக்கையாக பொதுமக்கள் பயன்படுத்தலாம். கோவையில் பாதுகாப்பிற்காக நிறைய பேட்ரோல்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. ரீல்ஸ் மோகம் குறித்த கேள்விக்கு இளைஞர்கள் சமூகத்தில் என்ன செய்கிறார்கள் என்பதை உணர்ந்து செய்ய வேண்டும். ஏற்கனவே இது சம்பந்தமாக வந்த புகார்களின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications