கொங்கில் கூட்டணிக்கு நோ சீட்.. ஸ்டாலினிடம் விடாப்படியா நின்ற தலைகள்! நேர்காணலில் நடந்த திடுக் விவாதம்
கோவை: கொங்கு மண்டலத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கக் கூடாது என முதல்வர் ஸ்டாலினிடம் ஒரே குரலில் வலியுறுத்தியிருக்கிறார்கள் உடன்பிறப்புகள். இந்த சம்பவம் அறிவாலயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுகவில் நேர்காணல் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொகுதிகளுக்கு சீட் கேட்டு விண்ணப்பித்தவர்களை ஒரு சேர அமர வைத்து நேர் காணலை நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். கடந்த 2021 தேர்தலிலும் சரி, 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி தனித்தனியாக அழைத்து நேர்காணல் நடத்தப் பட்டது. இந்த முறை நேரம் இல்லாததால், மாவட்ட வாரியாக சீட் கேட்டு விண்னப்பத்த அனைவரையும் அமர வைத்து நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நேர் காணலில், பொதுவான கேள்விகளே கேட்கப்படுகின்றன.

கோவை, நீலகிரி, கரூர், ஈரோடு, நாமக்கல்திமுக
நேற்று நடந்த கொங்கு மண்டல நேர்காணலில் கோவை, நீலகிரி, கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கான உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர். அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின், ''உங்கள் தொகுதியில் கள நிலவரம் எப்படி இருக்கிறது? அதிமுக-பாஜக கூட்டணிக்கான ஆதரவு எப்படி உள்ளது? அவர்களை விட நம் கூட்டணிக்கான ஆதரவு எப்படி இருக்கிறது? நடிகர் விஜய் கட்சியால் யாருக்கு பாதிப்பு? அவருடைய கட்சிக்கு ஆதரவு இருக்கிறதா? நான்கு முனை போட்டியால் திமுகவுக்கு சாதகமா? பாதகமா? என்பது போன்ற பொதுவான கேள்விகளையே கேட்டார்.
இதற்கு தகுந்த பதில்களைச் சுருக்கமாகச் சொன்னார்கள். அந்த பதில், திமுக வின் வெற்றியை உறுதிப்படுத்துவதாக இருந்தது. அதேசமயம், இந்த வெற்றியை கடினமான தேர்தல் பணிகளால்தான் பெற முடியும். அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்றும் சிலர் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
பொள்ளாட்சி தொகுதிக் குறித்து கூடுதல் நேரம் விவாதம்
கோவை மாவட்டத்திற்குள் அடங்கிய பொள்ளாட்சி தொகுதிக் குறித்து கூடுதல் நேரம் விவாதிக்கப்பட்டது. அதாவது, கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கினால் அவர்களையும் பெற்றிபெறவைக்க நீங்கள் கூடுதலாக உழைக்க வேண்டும் என்று துரைமுருகன் சொல்லியிருக்கிறார்.
அப்போது, அந்த அறையில் இருந்த 39 உடன்பிறப்புகளும், ''கொ.ம.தே.க.வுக்கு சீட் ஒதுக்கக்கூடாது. அப்படி ஒதுக்கினால் நாம் எப்படி உழைத்தாலும் அக்கட்சியை ஜெயிக்க வைக்க முடியாது. முதல் விசயம்... அக்கட்சியினர் மீது தொகுதியில் உள்ள அதிர்ப்தி. இரண்டாவது விசயம்...மாற்று சமூகத்தினர் ஒருங்கிணைந்து அதிமுக கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள் என்கிற நிலை இருக்கிறது. அதனால் திமுக தான் போட்டியிட வேண்டும்'' என்று ஒரே குரலில் சொல்லியுள்ளனர்.
அதனை இடமறித்துப்பேசிய ஸ்டாலின், ''திமுகவில் கொங்கு வேளாளர் சமூகத்தி னருக்கு ஒதுக்கினால் மட்டும் மாற்று சமூகத்தினர் வாக்களிப்பார்களா?'' என்று கேள்வி கேட்க, '' நிச்சயம் வாக்களிப்பார்கள். ஏனெனில், வேட்பாளர் கொங்கு சமூகமா என்பதை விட ஒரு சாதிக்காக இயங்கு கட்சியில் நிறுத்தப்படும் வேட்பாளரை வைத்து மக்கள் அளவிடுகிறார்கள். கொ.ம.தே.க. என்பது அச்சமூகத்திற்கான கட்சி. அதனால், மாற்று சமூகத்தினர் அக்கட்சியையும் அக்கட்சி நிறுத்தும் வேட்பாளரையும் ஏற்க மறுக்கிறார்கள்.
அதனால், திமுகவில் யாருக்கு வேண்டுமானாலும் சீட் கொடுங்கள். அவரது வெற்றிக்காக எல்லோரும் இணைந்து வேலைசெய்கிறோம். ஆனால், கூட்டணி கட்சியான கொ.ம.தே.க.வுக்கு மட்டும் கொடுக்காதீர்கள். திமுகவில் இருக்கும் கொங்கு வேளாளர் சமூக மக்களே அதை ஏற்கமாட்டார்கள்'' என்று கொ.ம.தே.க.வுக்கு எதிராகவும், திமுகவில் யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள் ; அதை ஏற்கிறோம் என ஒருமித்த குரலிலும் சொல்லியிருக்கிறார்கள்.
இதுவரை நடந்த நேர் காணலில் இப்படிப்பட்ட கோணத்தில் எந்த ஒரு மாவட்டத்தில் இருந்தும் குரல்கள் வரவில்லை. முதன்முறையாக கொங்கு மண்டல உடன்பிறப்பு களிடம் எழுந்துள்ளதால், இந்த நேர்காணல் திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிறப்பு நிருபர் எழில்
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
கோயம்புத்தூர்-க்கு வந்த அமெரிக்க டெக் நிறுவனம்.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்! -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
சூலூர் சிறுமி வழக்கு.. சரியான ரூட்டில்தான் போகிறது.. தமிழக அரசை மெச்சிய உயர் நீதிமன்றம்!












Click it and Unblock the Notifications