மூதாட்டின்னு கூட பார்க்கல! வீட்டில் தனியாக இருந்தவரிடம் அத்துமீறிய வடமாநில இளைஞர்கள்! அதிர்ந்த கோவை
கோவை: கோவை அருகே வீட்டில் இருந்த மூதாட்டியை வட மாநில தொழிலாளர்கள் 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அருகில் கட்டுமான பணி நடந்து வந்த நிலையில் வீட்டில் மூதாட்டி தனியாக இருந்ததை கவனித்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்த நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருபவர் 65 வயது மூதாட்டி. இவர் தனியாக வசித்து வருகிறார். கூலி வேலைக்கு சென்று அன்றாடம் வீட்டில் சமைத்து சாப்பிட்டு வருகிறார். இவரது வீடு அருகே வீடு கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பணிகளில் வடமாநில இளைஞர்கள் சிலர் தங்கியிருந்து பணி புரிந்து வருகிறார்கள்.

சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த மூதாட்டி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த வட மாநில தொழிலாளிகள் 3 பேர் நைசாக மூதாட்டியின் வீட்டுக்குள் சென்றனர். திடீரென அவர்கள் மூதாட்டியை கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்தனர். மூதாட்டி என்றும் பாராமல் மாறி மாறி பலாத்காரம் செய்தனர்.
இதில் அதிர்ச்சியடைந்து வலி தாங்க முடியாமல் மூதாட்டி கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். இதையடுத்து வட மாநில தொழிலாளர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். எனினும் நாலாபுறமும் சூழ்ந்த பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடித்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார் இதையடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அங்கு வந்த போலீசார் பிடிபட்ட 2 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வடமாநில தொழிலாளர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, கோவை, மதுரை, நெல்லை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வட மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் தங்கி பணி புரிந்து வருகிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ மட்டும் அவர்கள் சொந்த ஊர் சென்று வருகிறார்கள்.
இப்படி இங்கு தங்கி வேலை செய்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கின்றன என்று ஒரு புறம் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட சென்னையில் 8 இடங்களில் ஒரே நேரத்தில் செயின் பறித்து சென்ற உத்தர பிரதேச கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசாரின் பிடியில் இருந்து தப்ப முயன்ற ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
அவிநாசி சாலையில் 5 நாட்களுக்கு அதிரடி மாற்றம்.. கோவை பயனீர் மில் கிட்ட அதை கவனிச்சீங்களா? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications