ஓம் நமச்சிவாய.. ‛தட்சிண கைலாஷ்’ வந்ததே பெரும் பாக்கியம்.. ஈஷா மையத்தில் பூரித்துபோன திரெளபதி முர்மு!
கோவை: மகாசிவராத்திரியையொட்டி கோவை ஈஷா யோகா மையத்துக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று வருகை தந்தார். மகாசிவராத்திரி கொண்டாட்டத்தில் பங்கேற்ற திரெளபதி முர்மு ஈஷா யோகா மையத்தை பார்வையிட்டு லிங்க தரிசனம் செய்தார். அதன்பிறகு நடந்த நிகழ்ச்சியில், ஓம் நமச்சிவாயா என உரையை தொடங்கிய திரெளபதி முர்மு ஈஷா யோகா மையத்தை குறிப்பிட்டு தட்சிண கைலாஷ் வந்ததே பாக்கியம்' என பூரித்து பேசினார்.
மகாசிவராத்திரி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று தமிழ்நாடு வந்தார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு இன்று முதல் முறையாக வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மதுரை வந்த அவர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

ஈஷாவில் ஜனாதிபதி
அதன்பிறகு அங்கிருந்து தனிவிமானத்தில் கோவை வந்தார். கோவை ரேஸ்கோர்ஸில் ஓய்வெடுத்த திரெளபதி முர்மு மாலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்றார். அவரை ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். மாலை அணிவித்து ஜனாதிபதியை அவர் வரவேற்றார்.

வழிபாடு
அதன்பிறகு பேட்டரி காரில் அந்த மையத்தை சுற்றி பார்த்த திரெளபதி முர்மு தியானலிங்கம், யோகேஸ்வர லிங்கத்தை வழிபட்டார். மேலும் தீர்த்த குளத்தை பார்வையிட்டார். திரெளபதி முர்முவுடன் ஆளுநர் ஆர்என் ரவி, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

ஓம் நமச்சிவாயா என பேச்சு
அதன்பிறகு நடந்த மகா சிவராத்திரி விழாவில் திரெளபதி முர்மு பங்கேற்றார். இந்த விழாவில் திரெளபதி முர்மு பேசியதாவது ஓம் நமச்சிவா.. இந்த பிரபஞ்சத்தில் உள்ள மங்களகரமான மற்றும் அருளும், கருணையும் கொண்ட, 'சிவா' எனும் சுபத்தை குறிக்கும். இன்று நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இன்று காலை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.

தட்சிண கைலாஷ்
மகாசிவராத்தி எனும் புனிதமான நாளில் ஆதியோகியின் முன்னிலையில் இங்கு வந்ததை பாக்கியமாக கருதுகிறேன். என்னைப் போலவே நீங்களும் உள்ளுர உணர்வுகளை உணர்வீர்கள் என நம்புகிறேன். முழு பிரபஞ்சத்தையும் உயிர்ப்பிக்கும் ஆற்றலின் ஒரு வடிவத்தை நாம் உணர்கிறோம். கடந்த வாரம் சிவனின் தலங்களில் முதன்மையான வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவிலிலும், கால பைரவர் கோவிலிலும் தரிசனம் செய்தேன். டிசம்பர் மாத இறுதியில் ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுன சுவாமியை தரிசனம் செய்தேன். இப்போது வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் சுயம்பு பகவானான சிவனின் மற்றொரு உறைவிடமான தட்சிண கைலாசில் இப்போது இருக்கிறேன்.












Click it and Unblock the Notifications