சீமானின் சிங்கிள் வீடியோ.. தேசிய அளவில் டிரெண்ட் ஆகுதே.. வடஇந்தியாவில் எழுந்த விவாதம்.. SIR தீவிரம்!

Subscribe to Oneindia Tamil

கோவை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைக்கு வருவது வரவேற்கத்தக்கது என்றும், ஆனால் அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களிலேயே வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவரின் இந்த வீடியோ கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் டிரெண்டாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில், நமது அரசு டாஸ்மாக்கில் விற்கும் சரக்குகளை பாதுகாக்க பெரிய, பெரிய கிடங்குகளை அமைத்து கண்காணித்து பாதுகாத்து வருகிறது. தார்பாய் கூட வாங்கி போடவில்லை. நீங்கள் கட்டும் சமாதிக்கு எவ்வளவு கோடி செலவு செய்து இருக்கிறீர்கள்.

Election Commission Seeman

தெருவில் போட்டு நெல்லை முளைக்க வைப்பது தான் சாதனை.. அரசுக்கு மக்களின் நலனை பற்றி கவலை எங்கு..? இருக்கிறது. ஒருநாள் பட்டினி கிடந்து சாகும் போது தெரியும்.. கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சார்ட்டர்ட் விமானத்தில் அழைத்து செல்ல வேண்டுமா ? கள்ள சாராயத்தில் உயிரிழந்தவர்கள் கொழுப்பெடுத்து இறந்தார்கள். அவர்களுக்கோ போய் பணம் கொடுக்கிறீங்க.

SIR சீமான் பிடித்த பாயிண்ட்

கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சி காலத்தில் சேமிப்பு கிடங்கு கட்டியிருந்தால் நெல் வீதியில் கிடைக்குமா ? இந்த ஆண்டு மட்டுமா ? வீதியில் கிடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கிடக்கிறது. வாக்காளர் திருத்த பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற திருமாவளவன் கருத்தை நான் வரவேற்கிறேன். கோவை தெற்கில் வானதி வெற்றி பெற்ற 20 ஆயிரம் வாக்குகள் யாருடையது ?

தி.மு.க விடம் இருந்து தான் நாம் நாட்டை காக்க வேண்டும்.. இந்திய ஒன்றிய அரசு மட்டும் ஒரு மசோதாவை சரியாக கொண்டு வருகிறதா ? ஊழல் லஞ்சம் ஒளிந்து இருந்தால் எதற்காக ஈ.டி, ஐ.டி ரெய்டு.. தீவிரவாதத்தை ஒழித்து விட்டோம் என்கிறார்கள் அப்போது எதற்காக பகல்ஹாமில் தாக்குதல் நடந்தது. அப்போது எங்களை பொய் சொல்லி ஏமாற்றி விட்டீர்கள். இதற்காக நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். நிறைவாக அடுத்த மாதம் நடக்கக்கூடிய தண்ணீர் மாநாடு தண்ணீரின் தேவை மற்றும் அத்தியாவசியம் குறித்து விவரித்து பேசி உள்ளார்.

தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைக்கு வருவது வரவேற்கத்தக்கது, ஆனால் அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களிலேயே வாக்களிக்க வேண்டும். அரசியல் அதிகாரம் தமிழர்களிடமிருந்து நழுவிவிடும், நாம் நமது சொந்த நாட்டிலேயே அகதிகளாகிவிடுவோம்" என்று அவர் எச்சரித்தார்.

வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) குறித்து கருத்து தெரிவித்த சீமான், வட இந்தியாவில் இருந்து சுமார் 1.5 கோடி பேர் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டால், மாநிலம் இந்தி பேசும் பகுதியாக மாறிவிடும்

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சமூகங்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டாலும், வட இந்தியர்கள் இந்தி மொழியின் கீழ் ஒன்றிணைவார்கள் என்றும், அந்த வாக்குகள் அனைத்தும் பாஜகவுக்குச் செல்லும் என்று சீமான் குறிப்பிட்டார்.

Election Commission Seeman

சீமானுக்கு வரவேற்பு

அவரின் இந்த வீடியோ கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் டிரெண்டாகி வருகிறது. தங்கள் மாநிலங்களில் அரசியல் தலைவர்களை பிற மாநில நபர்கள் தேர்வு செய்வதை அனுமதிக்க கூடாது என்று பலர் சீமானின் இந்த வீடியோவை பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிற மாநில ஆட்கள் ஒரு மாநிலத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை பெறுகிற பட்சத்தில், அது மாநில அரசியலை, தனித்துவத்தை பாதிக்கும், ஒரு சில கட்சிகளுக்கு மட்டும் சாதகமாக அமையும் என்று மக்கள் பலர் வாதங்களை வைத்து வருகின்றனர். வடஇந்தியாவில் பல மாநிலங்களில் சீமானின் இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

Election Commission Seeman

ஸ்டாலின் கருத்து

தேர்தல் ஆணையம், எதிர்கட்சி ஆளும் கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் "சிறப்பு தீவிர திருத்தப் பணி" (SIR) நடத்தப்படும் என்று அறிவித்ததை அடுத்து, திமுக தலைமையிலான தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் இந்த மாநிலங்களில், வாக்காளர் பட்டியலில் உள்ள மக்களை குறிவைத்து, "சதி" நடப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. தமிழக மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் முயற்சி இது என்று விமர்சித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, நவம்பர் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை அறிவித்து நடத்தியதிலிருந்தே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் இந்த திருத்தப் பணி நடத்தப்படும் என்ற தேர்தல் ஆணையம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Election Commission Seeman

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், அக்டோபர் 26, 2025 அன்று, பாரதிய ஜனதா கட்சியும் (BJP) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் (AIADMK) இணைந்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision - SIR) பணிகளைப் பயன்படுத்தி, உழைக்கும் வர்க்கத்தினர், பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

அதிமுகவும் பாஜகவும் மக்களை நேருக்கு நேர் சந்திக்கும் துணிவின்றி, வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கும் நோக்குடன் செயல்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் இவர்களின் இந்த கணக்கு தவறாகப் போகும் என்று ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+