வயது 109.. பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் பாட்டி காலமானார்.. மோடிக்கே பிடித்தவராச்சே
கோவை: இயற்கை விவசாயம் செய்து மற்றவர்களை ஊக்கப்படுத்தி வந்ததற்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வென்ற கோவையை சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி தனது 109வது வயதில் இன்று காலமானார். பிரதமர் மோடிக்கு பிடித்த பாட்டியாக அறியப்படும் இவர் யார்? பின்னணி பற்றி இங்கே பார்க்கலாம்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள். இவருக்கு வயது 109. இவர் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வந்தார். மேலும் பலருக்கும் இயற்கை விவசாயத்தில் முன்னுதாரணமாக இருந்தார்.

பாப்பம்மாள் பாட்டியை பாராட்டி மத்திய அரசு கடந்த 2021ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இதன்மூலம் அவர் நம் நாடு முழுவதும் பிரபலமானார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதாவது செப்டம்பர் 17 ம் தேதி நடந்த திமுக முப்பெரும் விழாவில் பாப்பம்மாள் பாட்டிக்கு ‛பெரியார் விருது' வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பாப்பம்மாள் பாட்டி இன்று காலமானார். இதனால் பாப்பம்மாள் பாட்டியின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 109 வயதில் காலமான பாப்பம்மாள் பாட்டி பிரதமர் மோடியின் மனம் கவர்ந்தவராக இருந்து வந்தார்.
கடந்த 2021ம் ஆண்டு பிரதமர் மோடி கோவை வந்தபோது பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த சர்வதேச சிறுதானிய மாநாட்டில் பாப்பம்மாள் பாட்டி கலந்துக்கொண்டார். அப்போது பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசீர்வாதம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications